2023 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தாச்சு! இதுதான் ஆரம்ப விலை... அப்புறம் என்ன புக் செய்ய வேண்டியதுதான்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டியோ 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய டியோவின் விலை உள்பட ஸ்கூட்டரை பற்றிய முக்கிய விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் ஹோண்டா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்று டியோ ஆகும். 'புள்ளீங்கோ' ஸ்கூட்டர் என அழைக்கப்பட்டு வரும் டியோ குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களின் புறநகர் பகுதிகளில் இளம் தலைமுறையினரால் அதிகளவில் வாங்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த ஸ்கூட்டரை பெண்களுக்கு இணையாக ஆண்களும் அதிக எண்ணிக்கையில் வாங்கினர்.

honda dio 125 launched

ஆனால் சமீப காலமாக, டியோ ஸ்கூட்டரின் விற்பனை கடுமையான சரிவை சந்திக்க ஆரம்பித்தது. ஸ்கூட்டரை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த ஹோண்டா நிறுவனம் அதன்படி, 2023 டியோ ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகியது. இதற்கிடையில், ஸ்கூட்டரில் இருந்து வெளிவரும் எக்ஸாஸ்ட் சத்தம் இப்படித்தான் இருக்கும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இவ்வாறு இரட்டை திரைகளுடன் என கூறி கடந்த சில வாரங்களாக ஹோண்டா ஹைப் ஏற்றிக் கொண்டுவந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 13) முற்றிலும் புதிய, ஸ்போர்டியான தோற்றத்தில், அட்வான்ஸான வசதிகளை கொண்ட மற்றும் சவுகரியமான 2023 டியோ ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்மார்ட் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் புதிய டியோ 125 ஸ்கூட்டரை வாங்கலாம். இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.83,400-ஆகவும், ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.91,300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

honda dio 125 launched

தோற்றத்தை பொறுத்தவரையில், ஹோண்டாவின் புதிய பிராண்ட் லோகோ 2023 டியோவில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிராஃபிக்ஸும் மாற்றப்பட்டுள்ளது. ட்யூயல் அவுட்லெட் மஃப்லர் ஆனது க்ரோம் கவர் உடன் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ஏற்கனவே கூறியதுபோல், ஸ்போர்டியான எக்ஸாஸ்ட் சத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் நேர்த்தியாக பொருத்தப்பட்ட விளக்குகளுடன் ஸ்கூட்டரின் முன்பக்கம் முன்பை விட கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தில் உள்ளதை கூறியே ஆக வேண்டும். அதேபோன்று, ஸ்கூட்டரின் பின்பக்கமும் மாடர்ன் டெயில்லேம்ப் டிசைனில், பிளவுப்பட்ட கிராப் ரெயில் உடன் கூர்மையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

honda dio 125 launched

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், புதிய ஹோண்டா ஸ்மார்ட் கீ அமைப்பு 2023 டியோவில் வழங்கப்பட்டுள்ளது. புதிய டியோவில் ஒபிடி2-க்கு இணக்கமான 125சிசி பிஎஸ்6 PGM-FI என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் வாயிலாக செயல்படக்கூடியதாக உள்ளது. இவற்றுடன் ஐடியலிங் ஸ்டாப் சிஸ்டம் மற்றும் என்ஜின் இன்ஹாபிடர் உடன் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவையும் 2023 டியோவில் இடம்பெற்றுள்ளன.

இருக்கையை தூக்க பல்வேறு செயல்பாடுகளை கொண்ட ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு வெளிப்பக்கத்தில் (இருக்கையை தூக்க வேண்டிய அவசியம் இல்லை) பெட்ரோல் நிரப்பும் பகுதியின் மூடியை விரலின் மூலமாக திறந்து/ மூடி கொள்ளலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளது. தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பக்கம் ஆனது 171மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: புதிய அப்டேட்களினால் ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விற்பனை மீண்டும் வளர்ச்சியை காணுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். டியோவின் தோற்றம் முன்பை விட ஸ்டைலிஷாக மாறியுள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 2023 டியோவுக்கு ஸ்பெஷல் 10 வருட உத்தரவாதத்தை ஹோண்டா வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 18:51 [IST]
English summary
Honda dio 125 scooter launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X