‘புள்ளீங்கோ வாகனம்’ ஹோண்டா டியோ ஸ்கூட்டரை வாங்க ஆள் இல்லை!! விற்பனை நிறுத்தம்? இதெல்லாம் கால கொடுமை...

ஒரு யூனிட் கூட விற்பனையாகதால், ஒரு சமயத்தில் இந்தியாவில் பிரபலமாக இருந்த டியோ (Dio) ஸ்கூட்டரின் விற்பனையை ஹோண்டா நிறுத்தி கொள்ள உள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் எப்போதுமே ஜப்பானிய நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பது வழக்கமான ஒன்றுதான். சுஸுகி, டொயோட்டா, ஹோண்டா என அத்தகைய ஜப்பானிய நிறுவனங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். 2-வீலர்களில் ஹோண்டா, யமஹா போன்றவை இந்தியாவில் முன்னிலை வகிக்கின்றன.

honda dio & garzia scooters 0 units sold

இதில் குறிப்பாக, ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவின் சிறந்த விற்பனை ஸ்கூட்டராக விளங்குகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3,38,290 இருசக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை மூலமாக இந்திய சந்தையில் ஏப்ரலில் அதிகளவில் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து 2வது இடத்தை ஹோண்டா வகிக்கிறது.

இருப்பினும் இந்த விஷயத்தை கொண்டாடும் மனநிலையில் ஹோண்டா இருக்காது. ஏனெனில் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையான 3,38,290-இல் பெரும்பான்மையானவை ஆக்டிவா மற்றும் ஷைன் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை ஆகும். சிபி350 பைக்குகள் ஓரளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மற்றப்படி மற்ற எந்த ஹோண்டா 2-வீலரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

honda dio & garzia scooters 0 units sold

இந்த வகையில் 1 யூனிட் கூட விற்பனையாகாத ஹோண்டா 2-வீலர்களில் டியோ, கிரேஸியா ஸ்கூட்டர்களும், ட்ரீம், லைவ், சிபி200 எக்ஸ், சிபி500 எக்ஸ், ஹார்னெட் 2.0, சிபி300 ஆர், சிபிஆர் 650எஃப் போன்றவை உடன் மேலும் சில உயர் தரத்திலான பைக்குகளும் அடங்குகின்றன. விலையுயர்ந்த பைக்குகள் ஒரு மாதத்தில் 1 யூனிட் கூட விற்பனையாகாமல் போகுவது சாதாரண ஒன்றுதான். ஆனால் சிபி200 எக்ஸ், சிபி500 எக்ஸ் போன்ற மாடர்ன் ஹோண்டா அட்வென்ச்சர் பைக்குகள் கூட 1 யூனிட் கூட விற்பனையாகவில்லை என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளும் கடந்த 2022ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் குறிப்பாக, சிபி200 எக்ஸ் பைக்கை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா களமிறக்கியது. இவை ஒருபக்கம் என்றால், மறுப்பக்கம் ஒரு சமயத்தில் இந்திய ஸ்கூட்டர் சந்தையை ஆட்சி செய்துவந்த ஹோண்டா டியோ மற்றும் கிரேஸியா ஸ்கூட்டர்கள். புள்ளிங்கோ வாகனம் என்ற பெயரில் பலரும் ஒரு சமயத்தில் ஹோண்டா டியோ ஸ்கூட்டரை போட்டி போட்டு வாங்கினர்.

honda dio & garzia scooters 0 units sold

குறிப்பாக, மஞ்சள் நிறத்தில் டியோ ஸ்கூட்டரை வாங்கினால் கெத்தாக சுத்தலாம் என்கிற மனநிலையில் பல இளைஞர்கள் இருந்தனர். ஒரு சமயத்தில் என்றவுடன் பல வருடங்களுக்கு பின்னால் சென்றுவிட வேண்டாம், 5 - 6 வருடங்களுக்கு முன்னர்தான். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாததால் டியோ & கிரேஸியா ஸ்கூட்டர்களின் விற்பனையை நிறுத்தி கொள்ளும் நிலைக்கு ஹோண்டா வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: "காலம் தான் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது" என்கிற வசனமே தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. டியோ, கிரேஸியா ஸ்கூட்டர்களின் விற்பனையை ஹோண்டா நிறுத்தலாம் என்பது எங்களது யூகிப்பே தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை. டியோவின் இடத்தை நிரப்பும் பொருட்டு வேறொரு அசத்தலான ஜப்பான்-ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வரும் என நம்புவோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 1, 2023, 16:59 [IST]
English summary
Honda dio grazia scooters zero units sold in april 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X