இத்தனை எலெக்ட்ரிக் டூவீலர்களை ஹோண்டா களமிறக்க போகுதா! போட்டி நிறுவனங்களுக்கு எல்லாம் கரண்ட் ஷாக் அடிச்சிருச்சு
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களின் (Electric Two-wheelers) விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. பெட்ரோல் விலை (Petrol Price) மிகவும் அதிகமாக இருப்பது, இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) போன்ற எலெக்ட்ரிக் டூவீலர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்தியாவின் டூவீலர் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ள ஹோண்டா (Honda) நிறுவனம், இன்னும் ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை கூட களமிறக்கவில்லை.

ஆனால் இந்த குறையை ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளது. ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 10 எலெக்ட்ரிக் டூவீலர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் (Honda Activa Electric Scooter) இதில் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஜிஜேஎன்ஏ (GJNA) என்ற குறியீட்டு பெயரில், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அழைக்கப்பட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கழற்றி மாற்ற முடியாத வகையிலான பேட்டரி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாது, புத்தம் புதிய எலெக்ட்ரிக் மொபட் ஒன்றையும் ஹோண்டா அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் மொபட் தற்போதைய நிலையில் கே4பிஏ (K4BA) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல் அல்லாமல், இந்த எலெக்ட்ரிக் மொபட்டில் கழற்றி மாற்ற கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் தயாரிப்பாக அடுத்த ஆண்டிலேயே இந்த எலெக்ட்ரிக் மொபட்டும் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் களமிறங்கும் முதல் ஆண்டில், அதாவது வரும் 2024ம் ஆண்டில், 1 லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து நிறைய மாடல்கள் வரிசையாக களமிறக்கப்படும் என்பதால், உற்பத்தி எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் கால் பதிக்கவிருப்பது, டிவிஎஸ், பஜாஜ், ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








