ஹோண்டா இந்த வாகனங்களை இந்தியாவுல களமிறக்கபோகுதா? டிவிஎஸ் எக்ஸ்எல்க்கே ஆப்பு வைக்க திட்டம் போட்டாங்க போலிருக்கே

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda Motorcycle and Scooter India) இந்தியாவில் இரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு பேடன்ட் (Patent) உரிமத்தை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. இதனாலேயே முகம் தெரியாத புதுமுக நிறுவனங்கள்கூட இந்தியாவின் மின்சார இருசக்கர வாகனங்களைக் களமிறக்குவதில் பேரார்வம் கொண்டிருக்கின்றன. இதேபோல் சில வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய மின் வாகன சந்தையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளன.

Honda dax e and zoomer-e

இந்த மாதிரியான சூழ்நிலையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda Motorcycle and Scooter India) இந்தியாவில் இரு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேடன்ட் (patent) பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி பெட்ரோலில் ஓடும் இருசக்கரங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேடன்ட் அது பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு என தனி ரசிக பட்டாளம் உண்டு.

Honda dax e

அவர்கள் இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நிறுவனம் முதலில் ஆக்டிவா அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அது வேறு இரு புதுமுக இ-வாகனங்களுக்கான பேடன்ட் பதிவைச் செய்திருக்கின்றது.

டேக் இ: (Dax e:) மற்றும் ஜூமர் இ: (Zoomer e:) எனும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கே அது பேடன்ட் பதிவைச் செய்திருக்கின்றது. இரண்டுமே மொபட் ரக இ-வாகனங்கள் ஆகும். மேலும், இரண்டும் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டவையும்கூட. இந்த வாகனங்களுக்கே நிறுவனம் பேடன்ட் பதிவைத் தற்போது செய்திருக்கின்றது.

Honda zoomer e

ஆகையால், வெகு விரைவில் இந்த வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எஸ் 1 ப்ரோ, ஏத்தர் 450 எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ர்கி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.

உருவத்தால் இல்லை என்றாலும் இவை அவற்றின் சிறப்பு வசதிகள் வாயிலாக மேலே பார்த்த இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக இருக்கும். அதேவேளையில், இரண்டும் மிக சிறிய தோற்றம் கொண்ட இ-வாகனங்கள் ஆகும். இவற்றின் பயன்பாடு டிவிஎஸ் எக்ஸ்எல்லை-போல் இருக்கும்.

அதாவது மிக எளிமையாக இருக்கும். டிஎவிஎஸ் எக்ஸ்எல்லை சைக்கிளை ஓட்டத் தெரியாதவர்களால்கூட ஈசியாக ஓட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கணிசமான பயிற்சி இருந்தாலே போதுமானது. யார் வேண்டுமானலும் ஈசியாக ஓட்டிவிடலாம். இத்தகைய மிக சுலபமான வாகனமாகவே ஹோண்டா தற்போது பேடன்ட் செய்திருக்கும் இரு வாகனங்களும் இருக்கும்.

இரண்டிலும் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அவற்றின் வேகம் மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இதுவே வாகனங்களின் அதிகபட்ச வேகம் ஆகும். அதேவேளையில் ஓர் முழு சார்ஜில் இந்த வாகனங்கள் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

முழுக்க முழுக்க நகர பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு இருப்பதானலேயே மிக மிகக் குறைவான வேகம் மற்றும் ரேஞ்ஜ் திறன் கொண்ட வாகனமாக இவைக் காட்சியளிக்கின்றன. தினசரி ஆஃபிஸ் பயன்பாடு மற்றும் அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு பயணித்தல் உள்ளிட்டவற்றிற்கு மிக சிறந்த வாகனமாக இவை இருக்கும்.

மேலும், இந்த வாகனங்களைப் பயன்படுத்த டிரைவிங் லைசென்ஸ் அவசியம் இருக்காது. மிக மிகக் குறைவான வேகத்தில் செல்லக் கூடிய வாகனம் என்பதால் இதை பதிவு செய்யவும் தேவையில்லை. ஆகையால் வீட்டில் உள்ள சிறுவர்களாலும் இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றின் அதிகாரப்பூர்வ வருகை எப்போது அமையும் என்கிற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

நிறுவனத்தின் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்தியாவிற்கான ஹோண்டாவின் முதல் இ-வாகனமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இதன் வருகைக்கு பின்னரே நிறுவனத்தின் பிற மின்சார வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா ஆக்டிவா 2024 ஆம் ஆண்டிற்கு இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலுக்காக சில நிறுவனங்கள் காத்திருந்தன. அதில், ஹோண்டாவும் ஒன்று ஆகும். ஆகையால், விரைவில் இந்த நிறுவனத்தின் இ-வாகனம் விற்பனைக்கு வந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கானவே இசைவாகவே தற்போது பேடன்ட் பதிவு அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 29, 2023, 17:54 [IST]
English summary
Honda files patent for two electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X