இந்த பைக்குல போய் ஆக்ஸிடென்ட் ஆனாலும் ஒன்னும் ஆகாதா? அப்படி என்ன இருக்குது தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் பைக்கான கோல்ட் விங் டூர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 39.2 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பைக்கை ஹோண்டா பிக்வீங் டீலர்ஷிப்ளில் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனத்தின் கோல்டு விங் பைக் என்பது உலகம் முழுவதும் டூரிங் பைக்குகளில் பிரபலமான பைக்காக இருக்கிறது. இந்த பைக்கில் ஏராளமான அம்சங்கள் இருப்பதாலேயே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இது மட்டுமல்ல இந்த பைக் அதிக நம்பகத்தன்மை மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

honda gold wing

இந்த கோல்ட் விங் பைக் ஹோண்டா நிறுவனத்தின் அதிக எடை கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக் சுமார் 390 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதனால் இந்த பைக்கை பார்க்கிங் செய்வது கடினமாக இருக்கும். இதற்காகவே ஹோண்டா நிறுவனம் பார்க்கிங் செய்வதற்காக மெதுவாக நகரும் பங்க்ஷனலிட்டியை இந்த பைக்கில் புகுத்தியுள்ளது. இதை வைத்து இந்த பைக்கை சுலபமாக பார்க்கிங் செய்து விடலாம்.

இந்த பைக்கை இன்ஜினை பொருத்தவரை 1833 சிசி 4ஸ்டோக் 24 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது லிக்யூட் கூல்டு இன்ஜினாக இருக்கிறது. இது அதிகபட்சமாக 124 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும் 170 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

honda gold wing

இந்த பைக்கில் மொத்தம் 4 விதமான ரைடு மோடுகள் உள்ளன. டூர்,ஸ்போர்ட், ஈகான் மற்றும் ரெயின் என நமக்கு தகுந்தாற்போல் தேவையான ரைடு மோடுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பைக்கில் ரைடு பை ஒயர் டெக்னாலஜி இருக்கிறது. இதுபோக டயர்பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இரண்டு யூஎஸ்பி சி சாக்கெட்கள் அனைத்து லைட்டுகளும் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இதன் விண்டு ஸ்கிரீனை எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் ஸ்கிரீனாக செட் செய்துள்ளது.

இந்த பைக்கில் 7 இன்ச் முழு கலர் டிஎப்டி ஸ்க்ரீன் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கிறது. இதை ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியமாக இந்த பைக்கில் ஏர் பேக் ஆப்ஷன் இருக்கிறது.

இந்த பைக் குறித்து ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுசூமு ஒட்டாணி கூறும் போது: " இந்தியாவில் கோல்டு விங் பைக்கை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். நீண்ட ஆண்டுகளாக ஹோண்டா கோல்ட் விங் பைக் மார்க்கெட்டில் சொகுசு டூரிங் பைக்குகளில் அதிக அம்சங்கள் கொண்டது.

அதே நேரம் அதிக சொகுசு வசதிகளை தரும் பைக்காக அறியப்பட்டு பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயண அனுபவத்தையும், டூரிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.

இந்தியாவில் தற்போது டூரிங் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் மத்தியில் பைக் ரைடிங் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் பலர் வட இந்தியாவில் பல முக்கியமான இடங்களுக்கு பைக்கிலேயே டூர் செல்ல வேண்டும் என கருதுகின்றனர். இதனால் டூரிங் பைக்கில் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதை கணக்கிட்டு தான் ஹோண்டா நிறுவனம் தனது பிரத்தியேக பைக்கான கோல்டு விங் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 39.2 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது முற்றிலும் வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் இந்த பைக்கின் விலை அதிகமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்குக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக காஷ்மீர் லே, லடாக் போன்ற பகுதிகளுக்கு டூர் செல்லும் விரும்பிகள் பலர் இந்த பைக்கில் அப்பகுதிக்கு டூர் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களில் பலர் இந்த பைக்கை வாங்க கூடும்

More from DriveSpark

Article Published On: Friday, September 29, 2023, 16:51 [IST]
English summary
Honda gold wing tour india launch at 39 20 lakhs specs features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+