புல்லட் எல்லாம் இனி ஒன்னுமே கிடையாது! ஹோண்டாவின் இந்த பைக் வந்தா எல்லாம் காலியாகிடும்!

ஹோண்டா நிறுவனம் புதிய 350சிசி ஹைனஸ் பைக்கின் புதிய வேரியன்ட்டை டீஸ் செய்துள்ளது. கிளாசிக் தீம்களுடன் மெக்கானிக்கல் மாற்றமில்லாமல் இந்த பைக் இந்தியாவில் களமிறங்க உள்ளது. இதற்கு பாபட் என பெயரையும் வைத்துள்ளது. இதற்கான அர்த்தம் என்ன? இந்த பைக்கில் என்னென்ன விஷயமெல்லாம் நடக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனத்தின் 350 சிசி பைக்குகள் இந்தியாவில் தற்போது அதிகமாக டிரெண்டாகி வருகிறது. இந்த பைக்குகள் எல்லாம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. சமீப ஆண்டுகளாக 350 முதல் 450 சிசி செக்மெண்டில் ஹோண்டா நிறுவனம் தனது பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Honda Hness CB350 BABT

தற்போது ஹோண்டா நிறுவனம் 350 சிசி செக்மெண்டில் ஸ்கிரம்லர் ரக பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்க்கு போட்டியாக புதிய பைக் ஒன்றை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதற்காக கிளாசிக் தீம் வேரியன்ட்டை தற்போது நிறுவனம் அதன் சமூக வலைதளங்களில் டீஸ் செய்துள்ளது.

தற்போது வெளியான டீஸரின்படி இந்த பைக்கில் வட்ட வடிவ கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்ப்லிட் சீட் செட்டப் இருக்கிறது. அதுவும் டேன் நிறத்தில் லெதர் ஃபினிஷ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக ஒரே பீஸ்-ல் உள்ள ட்யூப்ளர் கிராப் ரெயில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக் ஹைனஸ் சிபி 350 பைக் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த பைக் பாபெட் என்ற பெயரில் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

Honda Hness CB350 BABT

இந்த பாபட் என்பதற்கு என்ன அர்த்தம் என ஹோண்டா நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த பைக் ஒரு ரெட்ரோ ஃபினிஷில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன் பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் நிஸான் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பிரேக் கேலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அலாய் வீல்கள் ஹோண்டா ஹைனஸ் பைக்கில் உள்ள அலாய் வீல் போலவே இருக்கிறது.

ஹோண்டா ஹைனஸ் 350 பைக்கை பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் டிஎல்எக்ஸ், டிஎல்எக்ஸ் ப்ரோ, டிஎல்எக்ஸ் ப்ரோ குரோம் மற்றும் லேஹஸி எடிசன் ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கில் விலையை பொறுத்தவரை 2.09 லட்சம் முதல் 2.16லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது டீஸ் செய்யப்பட்டுள்ள இந்த கிளாசிக் எடிசன் ஹைனஸ் பைக் டாப் வேரியன்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda Hness CB350 BABT

இதில் மற்ற ஹைனஸ் 350 பைக்கில் உள்ள மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே இருக்கும் அதில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தீம் மட்டும் கிளாசிக் தீம்மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 348 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக பொருத்தப்படும். இது 20.8 பிஎச்பி பவரையும் 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கின் முன்பக்கம் வீலிலும் பின் பக்க வீலிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆக இந்த பைக் கட்டமைக்கப்படுகிறது. இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், வாய்ஸ் கண்ட்ரோல், எல்இடி ஹெட்லைட், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், சைடு மவுண்ட் எக்ஸாஸ்ட், டூயல் ரியல் சாக்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக் மார்க்கெட் வந்தால் இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்க்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் வருகைக்காக ஹோண்டா ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த பைக் மார்க்கெட்டிற்கு வரும்போது அது நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்து விடும் என நம்பப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதுவரை ராஜாவாக இருந்த செக்மெண்டில் தற்போது கடும் போட்டியாளரை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 350 சிசி செக்மெண்டில் தனி காட்டு ராஜாவாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் மட்டும் தான் விற்பனையாகி வந்தது. தற்போது அதில் ஹோண்டா நிறுவனம் களத்தில் குதித்து ராயல் என்ஃபீல்ட் ரசிகர்களை தன் வசம் ஈர்க்க பல்வேறு யுக்திகளை கையாண்டுகள் உள்ளது. இந்த பைக் மார்க்கெட்டிற்கு வரும்போது நீங்கள் அதை வாங்க தயாராக இருப்பீர்களா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 19:43 [IST]
English summary
Honda hness cb350 babt variant teased launch soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X