விலை குறைவான ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேரு இதானா! ஒரே ஒரு எழுத்துல மொத்த கூட்டத்தையும் கதற விட்டுட்டாங்க

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனங்கள்தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. எனினும் டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஹீரோ (Hero) போன்ற ஜாம்பவான் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் காலடி பதித்துள்ளன.

இதை தொடர்ந்து ஹோண்டா (Honda) நிறுவனமும் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழையவுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Honda i-M Electric Scooter Name Trademarked

எனவே ஹோண்டா ஆக்டிவா இவி (Honda Activa EV) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில், EV என்பது Electric Vehicle என்பதை குறிக்கிறது. ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விஷயத்தில் தற்போது புதிய 'ட்விஸ்ட்' ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆம், ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது 2 புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது. அவை ஹோண்டா ஐ-எம் (Honda i-M) மற்றும் ஹோண்டா ஐ-எம்1 இ (Honda i-M1 e) ஆகியவை ஆகும். இந்த 2 பெயர்களும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சூட்டப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Honda i-M1 e Electric Scooter Name Trademarked

ஹோண்டா நிறுவனம் வரும் 2024ம் ஆண்டில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த கையோடு, உடனடியாக 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024ம் ஆண்டிலேயே சூட்டோடு சூட்டாக 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்க ஹோண்டா நிறுவனம் களமிறக்கவுள்ளதாம்.

அந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்த பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாகன சந்தையை பொறுத்தவரையில் பொதுவாக 'i' என்பது புத்திசாலித்தனமான (intelligent) மற்றும் புதுமையான (innovative) வாகனங்களை குறிக்கும். எனவே ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அதிநவீன வசதிகளை கொண்டதாக இருக்கும் என்பதால், போட்டி நிறுவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

இதில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழற்றி மாட்டும் வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், அதை கழற்றி விட்டு, ஏற்கனவே சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பொருத்தி கொள்ள முடியும். எனவே பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது.

இதன் காரணமாக பயணமும் தடைபடாது. ஒரு சில நிமிடங்களில் பேட்டரியை மாற்றி விட்டு, பயணத்தை தொடராலாம். அதே நேரத்தில் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிலையான பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை கழற்றி மாற்ற முடியாது. சார்ஜ் தீர்ந்து விட்டால், நாம் நேரம் ஒதுக்கி மீண்டும்தான் சார்ஜ் செய்ய வேண்டும்.

முதல் முறையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களை குறி வைத்தே ஹோண்டா நிறுவனம் இந்த 2 புதிய தயாரிப்புகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. எனவே அதிநவீன வசதிகளை கொண்டதாக இருந்தாலும் கூட, ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் 2 புதிய பெயர்களை பதிவு செய்து வைத்திருந்தாலும், அதே பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவே உறுதியான தகவல் கிடைக்க வேண்டுமென்றால், ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2023, 13:04 [IST]
English summary
Honda i m i m1 e electric scooter names trademarked all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+