பல்சர் பக்கம் இனி திரும்பி கூட பார்க்க மாட்டங்க! எஸ்பி160 பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா!
ஹோண்டாவின் எஸ்பி160 பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ரூ 1.17 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமான இந்த பைக்கில் இரண்டு விதமான வேறு வேரியன்ட்கள் உள்ளன. இந்த பைக் பஜாஜ் பல்சர் பி150 பைக்கிற்கு போட்டியாக களமிறங்குகிறது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி160 என்ற பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை யூனிகான் 160 பைக்கிற்கு ஒரு படி மேலே போஷிசன் செய்துள்ளது. இந்த பைக்கில் யூனிகான் பைக்கில் உள்ள பல்வேறு அம்சங்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. யூனிக்கான் பைக் போலவே இதுவும் இருக்கிறது.

இந்த பைக் யூனிகான் பைக்கை விட சற்று ஸ்போர்ட்டியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டேங்கில் மஸ்குலர் டிசைன், ஏரோ டைனமிக் அம்சம் கொண்ட இன்ஜின் பக்கம் பொருத்தப்பட்டுள்ள பவுல், ஷார்ப்பான லுக் கொண்ட ஹெட்லைட் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டெய்ல் லைட், H வடிவ சிக்னேச்சர் லைட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளது.
இந்த பைக்கின் இண்டிகேட்டர் எல்லாம் ஹாலஜன் லைட்டுக்களாக அமைக்கப்பட்டுள்ளன. டயர்களை பொருத்தவரை பின்பக்கம் 130மிமீ அகலம் கொண்ட டயர் பொருத்தப்பட்டுள்ளது. கூடவே ஸ்போட்ட்டியான மஃப்ளரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் க்ரோம் கவரிங் செய்யப்பட்டுள்ளது. இது பார்க்க இந்த பைக்கிற்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக்கை வழங்குகிறது.

இந்த எஸ்பி 160 பைக் இன்ஜினை பொருத்தவரை 162 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் யூனிகான் பைக்கிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13.5 எச்பி பவரையும் 14.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் மார்க்கெட்டில் நேரடியாக பஜாஜ் பல்சர் பி150, யமஹா எஃப் இசட், சுஸூகி ஜிக்ஸெர் 155 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோலில் கடிகாரம், சர்வீஸ் டியூ இண்டிகேட்ட,ர் கியர் பொஷிசன் இண்டிகேட்டர், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஃப்யூயல் கேஸ், சராசரி ஃபியூயல் மைலேஜ், சராசரி வேகம் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹோண்டா எஸ்பி 160 பைக் பீட்டல் டிஸ்க் பிரேக் உடன் வருகிறது. இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 594மிமீ நீளம் கொண்ட சீட் உள்ளது. 177 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 1347 மில்லி மீட்டர் வீல் பேஸ் உள்ளது.
இந்த பைக்கின் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இன்ஜின் ஸ்டாப் ஸ்விட்ச், ஹசார்டு ஸ்விட்ச் ஆகியன உள்ளன. இந்த பைக்குக்கு மூன்று வருடம் வாரண்டியை கொண்ட நிறுவனம் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அதை ஏழு வருடமாக மாற்றிக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. அதற்கு கொஞ்சம் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
இந்த ஹோண்டா எஸ்பி 160 பைக் மொத்தம் ஆறு விதமான கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், டார்க் ப்ளூ மெட்டாலிக், பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட், பியர்ல் இக்னோயஸ் பிளாக், மற்றும் பியர்ல் டீப் கிரவுண்ட் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது.
இந்த பைக்கின் விலையை பொருத்தவரை சிங்கிள் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூபாய்1,17,500 என்ற விலையிலும் டூயல் டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூபாய் 1,21,900 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு விலையும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் தான். உங்கள் ஊருக்கு தகுந்தாற்போல் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 160 சிசி செக்மெண்டில் உள்ள பைக்குகள் எல்லாம் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பல இளைஞர்கள் இந்த ரக பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய பைக் தற்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








