ஹோண்டா ஆக்டிவா இனி விற்பனையான மாதிரிதான்... புள்ளிங்கோ ஸ்கூட்டரான டியோவில் யாரும் எதிர்பார்க்காத வசதி!

ஹோண்டா டியோ எச் ஸ்மார்ட் (Honda Dio H Smart) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வருகை ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-விற்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), தனது பிரபல இருசக்கர வாகன மாடலான டியோ (Dio)-வில் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டியோ எச் ஸ்மார்ட் (Dio H Smart) எனும் தேர்வையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Honda dio h smart

இதனை விற்பனைக்குக் கொண்டு வந்த கையோடு ஹோண்டா நிறுவனம் டியோவின் பிற வேரியண்டுகளின் விலையை உயர்த்தி இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டான ஹோண்டா டியோ டிஎல்எக்ஸ்-ன் விலையில் ரூ. 1,586 உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த அதிரடி விலை உயர்வால் டியோவின் ஆரம்ப நிலை தேர்வு சற்று காஸ்ட்லியானதாக மாறி இருக்கின்றது.

சென்ற மாதத்தில் இந்த ஸ்கூட்டர் சிங்கிள் யூனிட்கூட விற்பனையாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹோண்டா நிறுவனம் விலை உயர்வைச் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. விலையுயர்விற்கு முன்பு டியோவின் விலை ரூ. 68,625 தொடங்கி ரூ. 72,626 ஆக இருந்தது.

Honda dio sport

இதிலேயே ரூ. 1,586 உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இப்போது டியோவின் ஆரம்ப விலையே ரூ. 70,211ஆக அதிகரித்திருக்கின்றது. மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 74,212 ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த திடீர் விலை உயர்விற்கான காரணம் என்ன என நீங்கள் கேட்கலாம். இதற்கும் அரசே காரணமாக இருக்கின்றது.

சமீபத்தில் ஓபிடி-2 விதியை அரசு கட்டாயப்படுத்தியது. இந்தி விதிக்கு ஏற்ப டியோவை தயார் செய்ததன் காரணத்தினாலேயே அதன் விலை உயர்ந்திருக்கின்றது. இந்த விலை உயர்வுடன் சேர்த்து கார்களில் காணப்படும் வசதியைக் கொண்ட புதிய தேர்வையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது டியோ பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த அம்சத்தால் டியோ, ஆக்டிவாவிற்கே டஃப் கொடுக்கக் கூடிய டூ-வீலரமாக மாறி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 77,712 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 109 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் சமீபத்திய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ற எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த அம்சத்துடன் சேர்த்தே நவீன கால கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற ஸ்மார்ட் கீ சிஸ்டம் எச்-ஸ்மார்ட் டியோவுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த சாவியை வைத்துக் கொண்டு பன்முக செயல்களை ரிமோட்டாக செய்து கொள்ள முடியும். குறிப்பாக, இருசக்கர வாகனத்தை லாக் செய்வது மற்றும் அன்லாக் செய்வது போன்றவற்றைச் செய்து கொள்ள முடியும். இதுதவிர சாவியை சொருகாமலே இருசக்கர வாகனத்தில் ரைடு செய்து கொள்ள முடியும். ஸ்மார்ட் சாவி கையில் இருந்தாலே போதுமானது.

இதை வைத்து ஸ்டார்ட்/ ஸ்டாப், வாகனம் எங்கே இருக்கு என்பதை கண்டறிதல் உள்ளிட்டவற்றைச் செய்து கொள்ள முடியும். வாகனம் எங்கே இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க ஸ்மார்ட் சாவியில் இருக்கும் ஒரு சின்ன பட்டனை அழுத்தினால், அது டூ-வீலரில் இருக்கும் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளையும் ஒளிர செய்யும்.

இதன் வாயிலாக வாகனம் எங்கே இருக்கின்றது என்பதை துள்ளியமாகக் கண்டறிய முடியும். இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட தேர்வாகவே டியோ எச் ஸ்மார்ட் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் முதன் முதலில் இந்த அம்சத்தை தனது புகழ் பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரிலேயே வழங்கியது. இதைத்தொடர்ந்து தற்போது டியோவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டியோவைத் தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் அதன் பிற தயாரிப்புகளிலும் எச்-ஸ்மார்ட் வசதியை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எந்த தயாரிப்பாக இருக்கும் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. நிறுவனத்தின் புதிய டியோ ஆக்டிவா எச்-ஸ்மார்ட் தேர்விற்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 20:24 [IST]
English summary
Honda launched dio h smart in india and price hiked for existing variants
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+