சொல்லாம கொள்ளாம எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஹோண்டா! ஆனா யாராலையும் வாங்க முடியாது!

ஹோண்டா நிறுவனம் ஐரோப்பாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இஎம்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குறுகிய தூரம் பயணிப்பவர்களைக் குறிவைத்து இந்த ஸ்கூட்டரை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகன பயணத்தைத் துவங்கியுள்ளது. முதல் தயாரிப்பாக இஎம்1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரை தனது பெட்ரோல் ஸ்கூட்டரை போலேவ வடிவமைத்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குறுகிய தூரம் மட்டும் பயணிப்பவர்களைக் குறி வைத்து இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

honda em1 e launch

ஹேண்டா நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த ஸ்கூட்டரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. அப்பொழுது 2025ம் ஆண்டிற்குள் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த வேண்டும். 2040 ம் ஆண்டிற்குள் ஹேண்டா நிறுவனம் கார்பன் நியூட்டிராலிட்டியை அடைய வேண்டும் என்ற கொள்கையின்படி முதல் தயாரிப்பாக இந்த இஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்கூட்டர் நகர்புற பயன்பாட்டில் குறைவான தூரம் பயணிப்பவர்கள் அல்லது நகரங்களுக்குள்ளேயே தினமும் அலுவலகம் - வீடு ஆகிய பயன்பாட்டிற்கு மட்டும் ஸ்கூட்டர்களை பயன்படுத்தபவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக இதை உருவாக்கியுள்ளது. இதில் ஸ்வாப் செய்யக்கூடிய பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பியர்ல் சன் பீம் ஒயிட், டிஜிட்டல் சில்வர் மெட்டாலிக், மற்றும் மேட் பாலிஸ்டிக் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

honda em1 e launch

இந்த ஸ்கூட்டரில் 10.3 கிலோ எடை கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 1.47 கிலோ வாட் ஹவர் கொள்ளளவு கொண்டது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 270 வாட்ஸ் ஏசி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் இந்த பேட்டரியில் 0-100 சதவீத சார்ஜை வெறும் 6 மணி நேரத்தில் ஏற்றி விடுகிறது. 25-75 சதவீத பேட்டரியை 2 மணி நேரம் 40 நிமிடத்தில் ஏற்றிவிடுகிறது. இதில் பிரஷ்லெஸ் ஹப் 0.58 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 45 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் நார்மல் மோடில் 41.3 கி.மீ ரேஞ்சையும், எக்கோ மோடில் 48 கி.மீ ரேஞ்சையும் வழங்கும் திறன் கொண்டது. ஒரு பேட்டரியை 2500 முறை சார்ஜ் செய்ய முடியும் என ஹோண்டா நிறுவனம் கேரண்டி அளிக்கிறது. பார்க்க சிறியதாக இருக்கும் இந்த ஸ்கூட்டர் எடையும் குறைவு தான். பேட்டரியுடன் சேர்த்து வெறும் 95 கிலோ எடை கொண்டது தான்.

honda em1 e launch

இந்த ஸ்கூட்டரில் 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 740 மிமீ உயரத்தில் சீட், 1300 மிமீ வீல் பேஸ் ஆகியன இருக்கிறது. சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்குகளைப் பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. வீல்களை பொருத்தவரை முன்பக்கம் 12 இன்ச் வீலும், பின்பக்கம் 10 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் எல்இடி டிஆர்எல்கள், வழங்கப்பட்டுள்ளது. சீட்களை பொருத்தவரை பெரிய சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக 35 லிட்டர் டாப் பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. சீட்டிற்குக் கீழே 3.3 லிட்டர் இட வசதி இருக்கிறது. இதில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது போக முன்பக்கம் 500 மிலி பெட் பாட்டில் வைக்கவும் இட வசதி உள்ளது.

இந்த ஸ்கூட்டரை ஐரேப்பாவில் உள்ளவர்கள் சொந்தமாக வாங்க முடியாது மாறாக லீஸ்க்கு எடுக்கலாம், வாடகைக்கு எடுக்கலாம். அல்லது சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான பேட்டரியை ரீசைக்கிள் செய்வது எல்லாம் ஹேண்டாவின் பொறுப்பு என்பதால் இந்த பைக்கை சொந்தமாக்க முடியாது என ஹேண்டா அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹேண்டாவின் இந்த சிறிய ஸ்கூட்டருக்கு ஐரோப்பில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதே போல இந்தியாவிலும் ஹோண்டா ஆக்டிவாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 13:08 [IST]
English summary
Honda launched em1 e electric scooter battery range all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X