2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்!! நிறைய மாறிடுச்சு... இவ்வளவு குறைவான விலையிலேயே வாங்கிடலாமா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2023 ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளின் விலை உள்பட பைக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய அப்டேட்களை பற்றி இனி பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகக்கூடிய மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று ஹார்னெட் 2.0 ஆகும். இத்தகைய மோட்டார்சைக்கிளை 2023ஆம் ஆண்டிற்காக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. 2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.39 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

honda launches 2023 hornet 2.0

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் புதிய அப்டேட்டாக, மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக்ஸ் ஹார்னெட் 2.0 பைக்கை புத்துணர்ச்சியானதாக மாற்றி இருப்பது மட்டுமின்றி, புதுமையானதாகவும் காட்டுவதை சொல்லியே ஆக வேண்டும். அத்துடன் இந்த பைக்கிற்கு 4 புதிய நிறத்தேர்வுகளை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

பேர்ல் இக்னியோயிஸ் கருப்பு, மேட் சங்க்ரியா சிவப்பு மெட்டாலிக், மேட் மார்வல் நீலம் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் என்பவை அந்த 4 புதிய பெயிண்ட் தேர்வுகளாகும். 2023 ஹார்னெட் 2.0 பைக்கின் அறிமுகம் குறித்து HMSI நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான சுசுமு ஒட்டணி கூறியதாவது, "அரசாங்கத்தின் சமீபத்திய விதிமுறைகளுக்கு இணங்க, HMSI அதன் தயாரிப்பு வாகனங்களின் வரிசையை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஒபிடி2-க்கு இணக்கமான 2023 ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் இன்று குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது" என்றார். இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்வதிலேயே மஸ்குலரான மோட்டார்சைக்கிளாக ஹார்னெட் 2.0-ஐ சொல்லலாம். பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, சிறிய அளவிலான மஃப்லர் மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்திலான 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த பைக்கின் குறிப்பிடத்தக்க தோற்ற அம்சங்கள் ஆகும்.

2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. அத்துடன், பருமனான யுஎஸ்டி ஃபோர்க்குகள், அலுமினியம் ஃபுட்ஃபெக்ஸ், இரு சக்கரங்களிலும் பெடல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவையும் புதிய ஹார்னெட் 2.0 பைக்கில் இடம்பெற்றுள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஹசர்ட் விளக்குகள், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், யுஎஸ்டி ஃபோர்க்குகள், மோனோ ரியர் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.

மேலும், 5 நிலைகளில் வெளிச்சத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் பெறுகிறது. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர், டச்சோ மீட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர், ட்வின் ட்ரிப் மீட்டர்ஸ், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் ட்யூ இண்டிகேட்டர் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.

இவற்றுடன் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால், அதுகுறித்த எச்சரிக்கையும் இந்த பைக்கில் பெற முடியும். 2023 ஹார்னெட் 2.0 பைக்கிலும் வழக்கமான 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 17.03 பிஎச்பி மற்றும் 15.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வாகன விற்பனை சற்று அதிகமாக இருக்கும். இதை டார்க்கெட் செய்தே புதிய ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளதாக கருதுகிறோம். இதனால் வரும் மாதங்களில் ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை அதிகரிப்பில் ஹார்னெட் 2.0 முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2023, 7:30 [IST]
English summary
Honda launches 2023 hornet 2 0 motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+