ஹோண்டா ஹார்னெட்டை இப்படியொரு பெயிண்ட்டில் வாங்கினால் ஏரியாவில் நீங்க தான் மாஸ்!! டியோவிலும் கிடைக்கும்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அதன் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் மற்றும் டியோ ஸ்கூட்டரில் புதியதாக ரெப்சோல் எடிசன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருகின்றன. நம் இந்தியர்கள் பெரும்பாலும் இவ்வாறான பண்டிகை நாட்களில் புது வாகனங்களை வாங்கவே விரும்புவர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருட இறுதி பண்டிகை காலத்தை முன்னிட்டு புது வாகனங்களை களமிறக்கி விடுகின்றன.

hornet 2.0& dio repsol editions

குறைந்தது, தற்போது ஹோண்டா நிறுவனத்தை போல் ஸ்பெஷல் எடிசன்களை ஆவது சந்தையில் அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் 2-வீலர்களில் ரெப்சோல் எடிசனை அறிமுகம் செய்வதை கடந்த காலங்களில் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், தற்போது ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் டியோ ஸ்கூட்டரில் ரெப்சோல் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், புதிய ஹார்னெட் 2.0 ரெப்சோல் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.40 லட்சமாகவும், புதிய டியோ 125 ரெப்சோல் எடிசன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.92,300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இவை லிமிடெட் எடிசன்கள் ஆகும். ஆதலால், இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இவற்றை ஹோண்டாவின் ரெட் விங் டீலர்ஷிப் மையங்களின் மூலமாக வாங்கலாம். ஹோண்டாவின் ரெப்சோல் வாகனங்கள் பொதுவாகவே ஆரஞ்ச், வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இருக்கும். புதிய ஹார்னெட் & டியோ ரெப்சோல் எடிசன்களும் அவ்வாறான நிறங்களிலான பெயிண்ட்டில் தான் உள்ளன. சக்கரங்களின் ரிம்கள் கூட ஆரஞ்ச் நிறத்தில் உள்ளதை பார்க்கலாம்.

hornet 2.0& dio repsol editions

புதிய ஹார்னெட் 2.0 ரெப்சோல் பைக் வழக்கம்போல் சிறந்த ஏரோடைனாமிக்ஸுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்டையும், பின்பக்கத்தில் X-வடிவில் எல்இடி எல்இடி டெயில்லேம்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் இருக்கை இரண்டு பிரிவுகளாகவும், சாவியை நுழைக்கும் பகுதி பெட்ரோல் டேங்கின் மீதும் வழங்கப்படுவது வழக்கம். அது புதிய ரெப்சோல் எடிசனிலும் தொடரப்பட்டு உள்ளது.

இந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கில் முழு டிஜிட்டல் லிக்யுடு கிரிஸ்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்படுகிறது. இதனுடன், 184.4சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பெறும் ஹார்னெட் 2.0 பைக்கின் புதிய ரெப்சோல் எடிசனில் புதியதாக அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச்சும் வழங்கப்பட்டு உள்ளது. மறுப்பக்கம், டியோ ரெப்சோல் ஸ்கூட்டரில் கூர்மையான டிசைனில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன், எக்ஸாஸ்ட் குழாய் கருப்பு நிறத்தில் இருப்பது டியோ ஸ்கூட்டரின் ஸ்டைலை மேலும் மெருக்கேற்றுவதாக உள்ளது. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கிராப் ரெயில் ஆனது இரண்டாக பிளவுப்பட்டதாகவும், டெயில் லேம்ப் மாடர்ன் டிசைனிலும் உள்ளன. ஹோண்டா டியோ ஸ்கூட்டரிலும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த 125சிசி ஸ்கூட்டரில் ஹோண்டாவின் ஸ்மார்ட் கீ வசதியும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், ஹோண்டாவின் புதிய ரெப்சோல் எடிசன்கள் பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனால், இவை லிமிடெட் எடிசன்களாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கக்கூடியவைகளாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. எங்களுக்கு தெரிந்தவரையில், தீபாவளி பண்டிகை நாட்கள் முடியும் வரையில் இவை விற்பனையில் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 21, 2023, 23:58 [IST]
English summary
Honda launches hornet 2 0 dio repsol editions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+