முன்ன விட ரொம்ப சூப்பர்! அந்த பைக்கையே ஹோண்டா களமிறக்கீருச்சா! விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா லிவோ (Honda Livo). இது கம்யூட்டர் ரகத்தை சேர்ந்த பைக் (Commuter Bike) ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடலை ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
2023 ஹோண்டா லிவோ பைக், மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை ட்ரம் (Drum) மற்றும் டிஸ்க் (Disc) ஆகும். இதில் ட்ரம் வேரியண்ட்டின் விலை 78,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிஸ்க் வேரியண்ட்டின் விலை 82,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். 2023 ஹோண்டா லிவோ பைக்கில், 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.67 பிஹெச்பி பவர் மற்றும் 9.30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில் இந்த பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் 2 சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் முன் பகுதியில் மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காம்பி பிரேக் சிஸ்டமும் 2023 ஹோண்டா லிவோ பைக்கில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர 2023 ஹோண்டா லிவோ பைக்கில் ஒருங்கிணைந்த இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், டிசி ஹெட்லேம்ப் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சர்வீஸ் செய்ய வேண்டிய நேரம் வந்தால் எச்சரிக்கை விடுக்கும் இன்டிகேட்டர் வசதியும், 2023 ஹோண்டா லிவோ பைக்கில் இடம்பெற்றுள்ளது. 2023 லிவோ பைக்கிற்கு ஹோண்டா நிறுவனம் மொத்தம் 10 ஆண்டுகள் வாரண்டி (Warranty) என அறிவித்துள்ளது. இதில் 3 ஆண்டுகள் ஸ்டாண்டர்டு வாரண்டி ஆகும்.
அதே நேரத்தில் 7 ஆண்டுகள் ஆப்ஷனல் நீட்டிக்கப்பட்ட வாரண்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஹோண்டா லிவோ பைக்கானது, ஓபிடி 2 (OBD 2 - On-board Diagnostics) விதிமுறைகளுக்கு இணக்கமானது. அதே நேரத்தில் 2023 ஹோண்டா லிவோ பைக், மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு தரமான கம்யூட்டர் ரக பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு 2023 ஹோண்டா லிவோ நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) மற்றும் ஹீரோ பேஷன் (Hero Passion) போன்ற பைக்குகள் உடன், 2023 ஹோண்டா லிவோ போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








