ஹோண்டா லிவோ... இப்படியொரு பைக்கை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் உடன் அறிமுகம்!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2023 லிவோ மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய லிவோ பைக்கில் அப்படி என்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? 2023 ஹோண்டா லிவோவின் விலை என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் பிஎஸ்6 முதலாம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவும் அப்டேட் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

honda livo with obd2 engine

இந்த வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஒபிடி2-க்கு இணைக்கமானதாக (பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறை) மேம்படுத்தப்பட்ட 2023 லிவோ மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகாத ஹோண்டா பைக்காக இருப்பினும், லிவோ சூப்பரான ஸ்டைலை கொண்டது மற்றும் சவுகரியமான & செயல்படுதிறன்மிக்க பயணத்தை வழங்கக்கூடியது.

2023 ஹோண்டா லிவோ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.78,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் ட்ரம் பிரேக் உடன் புதிய லிவோ பைக் கிடைக்கும். அதுவே, டிஸ்க் பிரேக் உடன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,500 ஆகும். 2023 ஹோண்டா லிவோ பைக்கை அத்லெடிக் நீலம் மெட்டாலிக், மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் மற்றும் கருப்பு என 3 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம்.

honda livo with obd2 engine

புதிய லிவோவின் ஒபிடி2-க்கு இணக்கமான புரோகிராம்டு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் அமைப்பில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழிற்நுட்பமும் உள்ளது. இந்த இஎஸ்பி தொழிற்நுட்பத்தின் உதவியுடன் என்ஜினை மென்மையாக ஸ்டார்ட் செய்ய முடியும். இதற்காக ப்ரஷ்லெஸ் ஏசிஜி ஸ்டார்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏசிஜி மூலமாகவே பைக்கின் பேட்டரியும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.

2023 லிவோ பைக்கின் என்ஜினில் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய சென்சார்களும் வழங்கப்பட்டு உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த சென்சார்கள் என்ஜினுள் போதுமான அளவிற்கு எரிபொருள் மற்றும் காற்றை கலந்து வழங்க உதவும். எனவே, பைக்கின் மைலேஜ் விஷயத்தில் இந்த சென்சார்கள் நேரடியாக தொடர்பு படுகின்றன. மேலும், இஎஸ்பி தொழிற்நுட்பம் என்ஜின் பாகங்களுக்குள் ஏற்படும் உராய்வையும் குறைக்கும்.

honda livo with obd2 engine

பைக் இயங்கும்போது என்ஜின் பாகங்களிடையே ஏற்படும் உராய்வினாலும் பைக்கின் மைலேஜ் பாதிக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். அத்துடன், சொலினாய்ட் வால்வும் 2023 லிவோவின் என்ஜின் அமைப்பில் அடங்குகின்றது. புதிய லிவோ பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக வெளிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் நிரப்பும் பகுதி மற்றும் ட்யூப்லெஸ் டயர்களை சொல்லலாம்.

சவுகரியமான பயணத்திற்கு, ஒரு ஸ்விட்ச்சை தட்டுவதன் மூலமாக ஆன்/ஆஃப் ஆகும் என்ஜின் மற்றும் பிரகாசமான டிசி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. பைக்கில் இருக்கை மொத்தம் 26 இன்ச்சில் நன்கு நீளமானதாக வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் 5 விதங்களில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடியதாக உள்ளது. காம்பி-பிரேக் சிஸ்டமும் (சிபிஎஸ்) 2023 லிவோவில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் ஹோண்டாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய வாகனம் என்றால் அது ஆக்டிவா தான். மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் ஹோண்டா சற்று பின்தங்கியே உள்ளது. அதிலிலும் குறிப்பாக, ஏற்கனவே கூறியதுபோல் ஹோண்டா லிவோ பைக்குகளின் விற்பனை மிகவும் சுமார் தான். மேம்படுத்தப்பட்ட என்ஜினின் மூலம் இனியாவது லிவோ பைக்குகளின் விற்பனை மேம்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2023, 19:31 [IST]
English summary
Honda livo launched with obd2 compliant engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X