100 கி.மீ மைலேஜில் ஹேண்டா ஆக்டிவா 7ஜி வரப்போகுதா? ஜன.,23ம் தேதி என்ன நடக்கப்போகுது?

ஹோண்டா நிறுவனம் வரும் ஜனவரி 23ம் தேதி தனது புதிய டூவீலரை இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஹேண்டா நிறுவனம் இந்தியாவில் ஒரு முன்னணி டூவீலர் தயாரிப்பு நிறுவனம் இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகள் மார்கெட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று விற்பனையையும் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சார்பில் H-Smart என்ற பெயருக்கு டிரேட்மார்க் வாங்கியிருந்தனர். அதன் மூலம் அந்நிறுவனம் இந்த பெயரில் தனது புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கி.மீ மைலேஜில் ஹேண்டா ஆக்டிவா 7ஜி வரப்போகுதா? ஜன.,23ம் தேதி என்ன நடக்கப்போகுது?

இந்நிறுவனம் ஏற்கனவே டூவீலர்களுக்காக ஹோண்டா எக்கோ டெக்னாலஜி (HET) என்ற தொழிற்நுட்பத்தில் இன்ஜின்களை தயாரித்து வந்தது. பிஎஸ் 6 கட்டுப்பாடுகள் வந்த போது என்ஹேன்ஸ்டு ஸ்மார்ட் பவர் (eSP) என்ற தொழிற்நுட்பத்தில் இன்ஜின்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிய பெயரில் ஸ்மார்ட் என்ற வார்த்தை இருப்பதால் இது ஹோண்டாவின் எலெக்ட்ரிக் ஹைபிரிட் தொழிற்நுட்பத்திற்கான பெயராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேண்டா ஜனவரி 23 குறித்து வெளியிட்ட அறிவிப்பிலும் ஸ்மார்ட் என்ற வார்த்தை இருக்கிறது. இதனால் இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு தொழிற்நுட்பமாக இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். இது வரும் ஜனவரி 23ம் தேதி தான் உறுதியாகத் தெரிய வரும். நீண்ட காலமாக ஹோண்டா நிறுவனம் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

100 கி.மீ மைலேஜில் ஹேண்டா ஆக்டிவா 7ஜி வரப்போகுதா? ஜன.,23ம் தேதி என்ன நடக்கப்போகுது?

இந்நிலையில் ஹோண்டாவின் இந்த அறிவிப்பு ஹோண்டா ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டருக்கான அறிமுகமாக இருக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இந்த 7ஜி ஸ்கூட்டர் ஒரு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த ஸ்கூட்டரில் தனி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போக இந்த பேட்டரி ரீ ஜெனரேட்டிவ் தொழிற்நுட்பத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும் மார்கெட்டிற்குள் இந்த ஸ்கூட்டரில் தனி எலெக்ட்ரிக் மோட் இருக்கும். என்றும் இது 10-15 கி.மீ வரை எலெக்ட்ரிக் பவரிலேயே இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் நீண்ட தூரப் பயணத்திற்காக மட்டும் பெட்ரோலை பயன்படுத்தும் ஆப்ஷன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

அதாவது இந்த ஸ்கூட்டர் 40 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது மட்டும் பெட்ரோல் பயன்படுத்தப்படும் என்றும் குறைவான வேகத்தில் வெறும் பேட்டரியிலேயே இயங்கும் திறன் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் லிட்டருக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் எனப் பேசப்பட்டு வந்தது. இது சாத்தியமாக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

இதன் விலையைப் பொருத்தவரை ஹைபிரிட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் தற்போது உள்ள ஐசிஇ இன்ஜினை காட்டிலும் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேண்டா நிறுவனம் இந்த ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை களம் இறக்குவது இந்நிறுவனம் வருங்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்கான ஒரு முயற்சிதான். இது வெற்றி பெறும்பட்சத்தில் ஹோண்டா தொடர்ந்து பிரத்தியேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை மும்முரமாக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அனைத்தும் யூகமே ஜனவரி 23ம் தேதி தான் இது குறித்த விரிவா தகவலை ஹோண்டா வெளியிடும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 11:02 [IST]
English summary
Honda may launch activa 7g electric hybrid scooter on January 23
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+