ஹோண்டா மங்கி இந்தியா வர போகுதா! மைலேஜ் 70கிமீ மேல தருதா! இதுக்கு மேல வேற என்ன வேணும்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), உலக நாடுகள் சிலவற்றில் மங்கி (Monkey) எனும் பெயரில் ஓர் இருசக்கர (Two Wheeler) வாகனத்தை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் குட்டியான தோற்றம் கொண்ட இருசக்கர வாகனம் ஆகும்.
இந்த டூ-வீலர் மாடலுக்கு தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அந்த நாட்டு நகர வாசிகள் மத்தியில் மங்கி பைக்கிற்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் இந்த மங்கி டூ-வீலரின் சிறப்பு பதிப்பான 'மங்கி லைட்னிங் எடிசன்'-ஐ தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் மங்கி பைக்கைக் காட்டிலும் மிக சூப்பரான தயாரிப்பாக மங்கி லைட்னிங் எடிசன் உருவாக்கப்பட்டு, விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. மங்கி, இது ஓர் 125 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இதையே இன்னும் சூப்பரான பைக்காக மாற்றி மங்கி லைட்னிங் எடிசன் எனும் பெயரில் சிறப்பு பதிப்பாக ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
அதாவது, சிறப்பு கவனம் கொள்ளப்பட்டு அது தற்போது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. சில காஸ்மெட்டிக் மாற்றம் மற்றும் புதிய கலர்களை ஹோண்டா சேர்த்திருக்கின்றது. மினு மினுக்கும் மஞ்சள் நிறம், கான்ட்ராஸ்டாக தெரிவதற்காக கருப்பு மற்றும் குரோம் பூச்சுக் கொண்ட கூறுகள் உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த தனித்துவமான வேலைப்பாடுகளினாலேயே மங்கி லைட்னிங் எடிசன் கண் கவர் வாகனமாக மாறி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, அதன் முரட்டுத் தனமான தோற்றமும் இருசக்கர வாகன காதலர்களைச் சுண்டி இழுக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. ஆக மொத்தம் இருசக்கர வாகன காதலர்களை காதல் வலையில் வீழ்த்தும் வகையில் அது இருக்கின்றது.
குறிப்பாக, பைக்கின் பக்கவாட்டு பேனல்கள், ஸ்விங்கார்ம், யுஎஸ்டி ஃபோர்க், ஃப்யூவல் டேங்க் மற்றும் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் ஆகியவற்றில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டு இருப்பது மனதைக் கொள்ளைக் கொள்ளக் கூடிய செயலாக இருக்கின்றது. இத்துடன் ஃபெண்டர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் ஆகியவை குரோம் பூச்சுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர ஆங்காங்கே கருப்பு நிற அணிகலனும் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றினாலேயே வழக்கமான மங்கியைவிட, மங்கி லைட்னிங் எடிசன் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. ஸ்டிக்கரிங்கும் அதிகளவில் இந்த சிறப்பு பதிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. தாய்லாந்தில் 108,900 பாத்-க்கு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை 2 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் ஆகும். வழக்கமான மங்கியைக் காட்டிலும் அதிக சிறப்பு அலங்காரப் பொருட்களை சிறப்பு பதிப்பு மங்கி கொண்டிருக்கின்ற காரணத்தினால் சற்று அதிக விலை அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

வழக்கமான மங்கி 99,700 பாத்-க்கு விற்கப்படுகின்றது. அதாவது, ரூ. 2.38 லட்சத்துக்கு விற்கப்படுகின்றது. இதுபோன்று ரக்கட் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு. ஆகையால், எப்போது வேண்டுமானால் ஹோண்டா அதன் மங்கி லைட்னிங் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என யூகிக்கப்படுகின்றது.
125 சிசி எஞ்ஜினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜினால் 9.2 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு லிட்டருக்கு 70.5 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. சோதனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைலேஜ் விபரம் இதுவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது இந்தியாவிற்கு வருகின்றதோ இல்லையோ ஹோண்டா இந்தியாவில் விரைவில் வேறொரு புதிய பைக் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. புதிய பைக் 160 சிசி பிரிவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் ஹோண்டா புதிய பைக்கை வெளியீடு செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









