சிபி350 பைக்குகளை அப்டேட் செய்தது ஹோண்டா... ராயல் என்பீல்டு என்ன கதியாக போகுதோ!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதியதாக அப்டேட் செய்யப்பட்ட ஹைனெஸ் சிபி350 (H'ness CB350) மற்றும் சிபி350 ஆர்எஸ் (H'ness CB350 RS) மோட்டார்சைக்கிள்களை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோண்டா ஹைனெஸ் பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களின் என்ஜின்களும் ரியல்-டிரைவ்-எமிஷன் (RDE)-க்கு இணக்கமானவைகளாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சமீப வாரங்களில் பல்வேறு வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் உடன் அறிமுகமாகுவதை பார்த்து வருகிறோம்.

2023 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!!

அந்த வகையில் தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஒபிடி2பி-க்கு இணக்கமான என்ஜின் உடன் 2023 ஹைனெஸ் சிபி350 மற்றும் ஹைனெஸ் சிபி350 ஆர்.எஸ் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் வழக்கம்போல் ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் மையங்களில் விற்கப்பட உள்ளன. இதில் 2023 ஹைனெஸ் சிபி350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,09,857 ஆகவும், 2023 ஹைனெஸ் சிபி350 ஆர்எஸ்-இன் விலை ரூ.2,14,856 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்த மார்ச் மாத இறுதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும். இத்துடன், சிபி350 வாடிக்கையாளர்களுக்காக 'மை சிபி, மை வே' (My CB, My Way) என்ற பெயரில் புதிய கஸ்டமைஸ்ட்சேஷன் பிரிவையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது பைக்கை பெற முடியும்.

அதாவது, வழங்கப்படும் ஆக்ஸஸரீகளுள் தங்களுக்கு பிடித்தமானவற்றை பொருத்தி பார்த்து வாங்கலாம். மோட்டார்சைக்கிளை போன்று, இந்த ஆக்ஸஸரீகளும் ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் மையங்களில் தான் கிடைக்கவுள்ளன. 2023 ஹைனெஸ் சிபி350 பைக்குகளிலும் வழக்கமான 350சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், OHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. தற்போது ஒபிடி2பி-க்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த என்ஜினில் பிஜிஎம்-ஃப்யுல் இன்ஜெக்டட் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 3,000 ஆர்பிஎம்-இல் 30 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியது. என்ஜினின் சிலிண்டர் மீது பொருத்தப்பட்டுள்ள முக்கிய ஷாஃப்ட் கோ ஆக்ஸியல் பேலன்சர் ஆனது பைக்கின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட அதிர்வுகளை தவிர்க்கிறது. இதன் மூலமாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்குகள் நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது.

ஹோண்டா சிபி350 பைக்குகளின் எக்ஸாஸ்ட் அமைப்பானது 45மிமீ-இல் பெரிய டெயில் குழாயை கொண்டுள்ளது. எக்ஸாஸ்ட் சத்தம் கம்பீரமாகவும், அதேநேரம் லோ-பிட்ச்சில் இருப்பதற்கு இந்த பெரிய டெயில் பைப் உதவுகிறது. என்ஜின் அமைப்பில் சிலிண்டரின் பொசிஷன் சற்று ஆஃப்-செட் ஆக உள்ளதால் ஸ்லைடிங் உராய்வு குறைக்கப்படுகிறது. அத்துடன், சமச்சீரற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள ராட் ஆனது எரிக்கப்படும் எரிபொருள் வீணாகுவதை குறைக்கிறது.

இவற்றுடன், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC), ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் (HSVCS), அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச், அட்வான்ஸ்டு டிஜிட்டல்-அனலாக் மீட்டர் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களையும் புதிய ஹோண்டா சிபி350 பைக்குகள் பெற்றுள்ளன. இவை மட்டுமின்றி, அவசரகால ஸ்டாப் சிக்னல் வசதியும் புதியதாக இந்த பைக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது சடர்ன் பிரேக்குகளை உடனடியாக பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரிவிக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 19:38 [IST]
English summary
Honda motorcycle scooter india launches 2023 hness cb350 cb350rs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+