டிராஃபிக்கில் எல்லா சந்து பொந்திலும் புகுந்து போகலாம்!! 2023 ஹோண்டா டியோ - இன்னும் ஒல்லியான தோற்றத்தில்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட முற்றிலும் புதிய 2023 டியோ (Dio) ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய டியோ ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அத்துடன், வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் ஒபிடி-2 கருவியும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டு ஒவ்வொரு வாகனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது பிரபலமான ஸ்கூட்டரான டியோவை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது.

honda motorcycles & scooters launches 2023 dio

புதிய அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.70,211 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டியோ ஸ்கூட்டரில் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு இருப்பது மட்டுமின்றி, கூடுதல் வசதிகளும், புதிய கிராஃபிக்ஸும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், பிஎஸ்6 2-கட்டத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட 109.51சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் புதிய டியோவில் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 7.65 பிஎச்பி மற்றும் 9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு வழங்கும். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், திருத்தியமைக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதிய டியோவில் வழங்கப்பட்டுள்ளது.

honda motorcycles & scooters launches 2023 dio

இந்த புதிய டிஜிட்டல் திரை முன்பை விட கூடுதல் விபரங்களாக எரிபொருளின் அளவு, ரியல்-டைம் எரிபொருள் திறன் மற்றும் சராசரி மைலேஜை காட்டும். இவற்றுடன் புதிய டியோ ஸ்கூட்டரில் 12-இன்ச் முன் சக்கரங்கள் மற்றும் முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட டியோவில் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக முன்பக்கத்தில் புதிய வடிவில் பாக்கெட், 3 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷன், பாஸ் ஸ்விட்ச், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

முன்பக்கத்தில் ஹெட்லேம்ப்களும், டிஆர்எல்-களும் எல்இடி-ஆக மாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, பெட்ரோல் டேங்க் வடிவமும் மாற்றப்பட்டு, 18-லிட்டர்கள் கொள்ளளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக 'ஸ்மார்ட்' என்ற பெயரில் புதிய வேரியண்ட் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில், பெயருக்கேற்ப 'ஸ்மார்ட் கீ' வசதி கிடைக்கும்.

honda motorcycles & scooters launches 2023 dio

அத்துடன் டியோவின் இந்த புதிய டாப் வேரியண்ட்டில் அலாய் சக்கரங்களை பெறலாம். டியோ ஸ்மார்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.77,712 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் உடன் சேர்த்து, ஹோண்டா டியோவை இனி ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என்ற 3 விதமான வேரியண்ட்களில் பெறலாம். இந்த 3 வேரியண்ட்களையும் வெவ்வேறு விதமான நிறங்களில் பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆக்டிவாவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ஜப்பானிய ஸ்டைல் ஹோண்டா ஸ்கூட்டராக டியோ விளங்கி வந்தது. ஆனால் சமீப மாதங்களாக ஹோண்டா டியோவின் விற்பனை பெரிய அளவில் இல்லை என நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். இவை எல்லாவற்றையும் புதிய டியோ சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 12, 2023, 20:02 [IST]
English summary
Honda motorcycles scooters launches 2023 dio
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X