5,321 ரூபா மதிப்புள்ள 10வருட வாரண்டியை இலவசமாக வழங்கும் ஹோண்டா! ஆனா குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே! அது எது

ஆக்டிவா (Activa), யூனிகார்ன் (Unicorn) போன்ற பிரபலமான இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வரும் ஹோண்டா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் சிறப்பு திட்டம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

அது ரூ. 5,321க்கு வழங்கப்படும் 10 ஆண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியை புதிய வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இந்த சலுகை எதற்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது? மற்றும் எந்தெந்த மாடலுக்கு பொருந்தும் என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Honda extended warranty program

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது.

அதாவது, நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ரூ. 5,321க்கு வழங்கப்படும் 10 ஆண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியை முற்றிலும் இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. தன்னுடைய பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவிற்காக நிறுவனம் எக்ஸ்டென்டட் வாரண்டி மற்றும் எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் எனும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த திட்டங்களின் அறிமுகத்தின் ஒரு பகுதியாகவே 10 ஆண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியை இலவசமாக வழங்குவதாக ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. இந்த சலுகை ஹைனெஸ் சிபி 350 மற்றும் சிபி 350 ஆர்எஸ் ஆகிய இரு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேவேளையில், முதல் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட இருக்கின்றது.

ஆகையால், முதல் 10 ஆயிரம் நபர்களில் ஒருவராக ஹைனெஸ் சிபி 350 அல்லது சிபி 350 ஆர்எஸ் ஆகிய இரண்டில் ஏதேனும் ஓர் பைக்கை வாங்குவீர்கள் என்றால் உங்களுக்கு கட்டாயம் 10 ஆண்டுகளுக்கான கூட்டப்பட்ட வாரண்டி இலவசமாக வழங்கப்படும். 10,001-வது நபராக நீங்கள் வாங்கினாலும்கூட உங்களுக்கு இந்த சலுகைக் கிடைக்காது.

ரூ. 5,321 செலுத்தினால் மட்டுமே இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களால் பெற்ற கொள்ள முடியும். ஹோண்டா நிறுவனம் பிக்-விங் எனும் பெயரில் தனி ஷோரூம்களை அமைத்து அதில் தன்னுடைய பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களை மட்டும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு கிடைக்கும் தயாரிப்புகளுக்கு என்றே அந்நிறுவனம் எக்ஸ்டென்டட் வாரண்டி மற்றும் எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டிருக்கும் எனில் அதில் தீர்வு காண்பது தொடங்கி, நாம் இந்த பைக்கிற்காக செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க இந்த வாரண்டி திட்டம் உதவியாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது ஹோண்டா.

இந்த கூட்டப்பட்ட வாரண்டி திட்டம் ஹோண்டாவின் தயாரிப்புகளின் மீது வாடிக்கையளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பிக்-விங் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் டிமாண்டை அதிகரிக்கச் செய்யவும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.

பிக் விங் ஷோரூம் வாயிலாக ஹோண்டா நிறுவனம் சிபி 300எஃப், சிபி 300ஆர், ஹைனெஸ் சிபி350, சிபி 350ஆர்எஸ், சிபி 500எக்ஸ், சிபி 650ஆர், சிபிஆர் 650ஆர், சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர், ஆப்பிரிக்கா ட்வின் மற்றும் கோல்டு விங் டூர் ஆகிய இருசக்கர வாகன மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஷோரூமில் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா மற்றும் யூனிகார்ன் போன்ற வழக்கமான டூ-வீலர் மாடல்களை எல்லாம் பார்க்க முடியாது. பிக்-விங் ஷோரூமானது இந்தியாவின் பட்டி-தொட்டியில்கூட தொடங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கோவை, மதுரை மற்றும் தஞ்சை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில்கூட ஹோண்டா நிறுவனம் பிக் விங் ஷோரூமை திறந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரீமியம் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் 10 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை ஹோண்டா பிக் விங் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 21:26 [IST]
English summary
Honda offers 10 yr warranty free here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+