ஹீரோ, டிவிஎஸ்-ஐ ஓடஓட விரட்ட தயாராகும் ஹோண்டா.. ஆக்டிவா ஸ்டைலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருவது உண்மைதான் போல!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்திய சந்தையில் விரைவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (electric scooter)-களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் (Honda Motorcycle and Scooter India), வெகு விரைவில் இந்தியா மின் வாகன சந்தையில் இரண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Honda electric two wheeler

இந்த தகவல் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றின் வாயிலாகவே வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. ஆனால், துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், 2024 ஆம் ஆண்டிற்கு ஹோண்டாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிடும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய நிலவரப்படி ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), பஜாஜ் (bajaj Auto) மற்றும் டிவிஎஸ் (TVS Motor) போன்ற ஒரு சில முன்னணி நிறுவனங்களே தங்களின் பிராண்டுகளின்கீழ் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒற்றை எலெக்ட்ரிக் டூ-வீலரையாவது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Honda to electric two wheelers

ஆனால், ஹோண்டா ஒற்றை தேர்வைகூட இந்திய மின்சார இருசக்கர வாகன பிரிவில் வழங்கவில்லை. இந்த நிலையிலேயே இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தகவல் வெளியாகி உள்ளது. அதுவும், இந்தியர்களை இருமடங்கு குஷிப்படுத்தும் விதமாக இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுமட்டுமில்லைங்க, இப்போது வெளியாகி இருக்கும் ஆவணங்கள் இன்னும் சில முக்கிய தகவல்களை வெளியீடு செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதாவது, ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களில் ஒன்று ஃபேமிலி பயன்பாட்டிற்கு உகந்ததாகவும், மற்றொன்று ஸ்போர்ட்ஸ் ஸ்டைலில் இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

Honda dax e zoomer e

மேலும், ஃபேமிலி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆக்டிவா ஸ்டைலிலும், ஸ்போர்ட்ஸ் ஸ்டைலில் இருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர் டியோ தோற்றத்திலும் விற்பனைக்கு வர இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் டேக் இ: (Dax e:) மற்றும் ஜூமர் இ: (Zoomer e:) எனும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு பேடன்ட் பதிவைச் செய்தது.

இரண்டுமே மொபட் ரக இ-வாகனங்கள் ஆகும். மேலும், இரண்டும் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டவையும் ஆகும். இந்த வாகனங்களுக்கே நிறுவனம் பேடன்ட் பதிவை இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திருந்தது. இந்த நிலையிலேயே இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை ஹோண்டா நிறுவனம் உறுதிச் செய்திருக்கின்றது.

முதலில் ஆக்டிவா மற்றும் டியோ அடிப்படையில் உருவாக்கப்படும் இ-வாகனங்களே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கு பின்னரே டேக் இ: மற்றும் ஜூமர் இ: எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டும் குறைந்த வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் ஆகும்.

இவற்றை ஹெல்மெட், லைசன்ஸ் மற்றும் பதிவு சான்று என எதுவும் தேவைப்படாது. நகர்புற பயன்பாடு மற்றும் டெலிவரி சேவையை பிரிவை முன்னிட்டு இவற்றை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த இரண்டும் நிறுவனத்தின் மலிவு எலெக்ட்ரிக் டூ-வீலர்களாகவும் இருக்க வாய்ப்பு இருக்கின்றன. ஆனால், இவற்றின் வருகை எப்போது அமையும் என்கிற தகவல் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா தன்னுடைய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கும் எனில் அது ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஹீரோ விடா வி1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும். இப்போது ஹோண்டாவின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா எலெக்ட்ரிக் பைக்கையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 20:17 [IST]
English summary
Honda official documents confirmed to launch two electric scooters in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X