ஆக்டிவா ஸ்கூட்டர் பெயரில் புதிய மாற்றம்? இனிமே இந்த பெயரை நீக்கிவிட்டு புதிய பெயரை வைக்க போறாங்களாம்!

ஹோண்டா நிறுவனம் அதன் பெயருக்குப் பின்னால் வரும் 5ஜி, 6ஜி போன்ற பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது மார்கெட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் இதை நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் என்றால் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரை சொல்லலாம். நீண்ட ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்றுச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்துள்ளது. தொடர்ந்து இந்த ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வர முக்கியமான காரணம் இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் செய்யும் அப்டேட் தான்.

Honda Activa Remove G Tag

இப்படியாக அந்நிறுவனம் செய்யும் அப்டேட்களை மக்கள் பிரித்துப் பார்க்க வசதியாக ஒவ்வொரு தலைமுறை ஸ்கூட்டருக்கு 4ஜி, 5ஜி என ஆக்டிவா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு துணை பெயரைச் சேர்த்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வந்தது. இந்த துணை பெயரில் ஜி என்பது ஆங்கிலத்தில் ஜெனரேஷன் என்பதைக் குறிக்கும் இந்த பழக்கத்தை ஹேண்டா நிறுவனம் 2015ம் ஆண்டு 3வது தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து துவங்கியது.

3ஜி என்றால் 3வது தலைமுறை, 4ஜி என்றால் 4வது தலைமுறை, இப்படியாக 6ஜி என்ற 6வது தலைமுறை ஸ்கூட்டர் வரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தலைமுறைகளில் காலத்திற்கு ஏற்ப புதிய வசதிகள், அம்சங்கள், டிசைனில் மாற்றம் என அப்டேட்டகளை கொண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இனி இந்த ஜி டேக்கை தன் ஸ்கூட்டரில் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது.

Honda Activa Remove G Tag

தற்போது மார்கெட்டில் ஸ்கூட்டர்களில் ஏகப்பட்ட அப்டேட் வருகிறது. தலைமுறை மாற்றம் என்றால் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஹோண்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இனி ஆக்டிவா ஸ்கூட்டரில் மார்கெட்டின் டிமாண்டிற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்த ஜி டேக் இருந்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் ஹோண்டா நிறுவனம் அடுத்த அப்டேட்டிலிருந்து ஜி டேக்கை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இனி டேக்கிற்கு பதிலாக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்ட ஆண்டையே அடையாளமாக வழங்க முடிவு செய்துள்ளது. மற்ற நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆண்டையே அடையாளம் காணும் விஷயமாக வைத்துள்ளனர்.

Honda Activa Remove G Tag

அதே போல இனி ஹோண்டா நிறுவனமும் வருடக் கணக்கையே பயன்படுத்தவுள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை தற்போது 2 வெர்ஷனாக வெளியிட்டு வருகிறது. ஒன்று 110 சிசி இன்ஜின் கொண்ட வெர்ஷன், மற்றொன்று 125 சிசி இன்ஜின் கொண்ட வெர்ஷன் விரைவில் ஆக்டிவாவில்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது மார்கெட்டில் ரூ75,347 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மக்களால் விரும்பப்படும் ஸ்கூட்டர் இந்த ஆக்டிவா தான். ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. தற்போது இந்த ஸ்கூட்டரில் மிகப்பெரிய அப்டேட்டை ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஸ்கூட்டர் மார்கெட்டை மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கைபற்றி வரும் நிலையில் இந்த முக்கியமான முடிவை ஹேண்டா எடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 9, 2023, 9:48 [IST]
English summary
Honda planning to remove the g tag from activa scooter know why
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X