Honda Activa Electric: ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிலீஸ் தேதி வெளியானது! விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த ஸ்கூட்டர்களை விரும்பி வாங்கி வருகின்றனர். தற்போது சிறந்த பெர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்கூட்டர்களை அதிகமாக ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இது போக சிம்பிள் ஒன் நிறுவனம் தனது தயாரிப்பை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.
தற்போது ஓலா நிறுவனம் தான் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் நிலையில் ஹோண்டா நிறுவனமும் இந்த செக்மெண்டில் தனது காலடித் தடத்தைப் பதிக்க முடிவு செய்துள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் இதற்காக பெரும் திட்டத்தையே வைத்துள்ளது. இந்த திட்டம் குறித்த தகவல்கள் தான் நாம் முழுமையாகக் காணப்போகிறோம்.

ஹோண்டா நிறுவனம் வரும் 2031ம் ஆண்டிற்குள் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொ விதமான பவர் டெரைன், பாடி டைப், ஸ்பீடு ஆகியவற்றில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது.
முதற்கட்டமாக இந்நிறுவனம் 2 ஸ்கூட்டர்களை இந்த செக்மெண்டில் உருவாக்கத் தயாராகி வருகிறது. K4BA மற்றும் GJNA என்ற கோட் பெயர்களில் இந்த ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது. இந்த இரண்டும் இரண்டு வகையான தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. ஒன்று பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பத்தின் படி தயாரிக்கப்படுகிறது. மற்றொன்று ஃபிக்ஸடு பேட்டரி தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
இதில் ஃபிக்ஸடு பேட்டரி ஸ்கூட்டர் தான் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டாராக அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்கூட்டர் வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஸ்வாப்பிள் பேட்டரியை கொண்ட ஸ்கூட்டரை வரும் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டமாக 2026-27ம் நிதியாண்டில் மேலும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களை எல்லாம் ரூ1-1.5 லட்சம் விலையில் விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களை இந்நிறுவனத்தின் ஆலையில் ஆண்டிற்கு 50 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவிற்குக் கொள்ளளவுடன் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க இந்நிறுவனம் ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போதே பெங்களூருவில் இந்த பணியை ஆரம்பித்துவிட்டது.இந்நிறுவனம் முதற்கட்டமாக 70 பேட்டரி ஸ்வாப்பிங் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இவிகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. 2030ம் ஆண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்பில் 15-25 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனமாக இரக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டூவீலர் மார்கெட்டில் 5-7 சதவீதம் தற்போது எலெக்ட்ரிக் வாகனமாக மாறிவிட்டது. இதனால் ஹோண்டா அதற்கு தற்போது தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications








