மார்ச் 29ம் தேதி ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுதா? பெரிய சம்பவத்திற்குக் காத்திருக்கும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற குறைந்த விலை பைக்கை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஹோண்டா நிறுவனமும் இந்த பைக்கை களம் இறக்கியுள்ளது. பலரைத் திருப்பி பார்க்க வைத்துள்ளது மாஸ் மார்கெட்டில் ஹோண்டா நிறுவனம் காலடித் தடத்தை வைத்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனது ஷைன் 100 அறிமுக விழாவில் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் செக்மெண்டிலும் காலடித் தடத்தைப் பதிக்கப்போவதையும், ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கு மார்டன் டச் வழங்கப்போவதையும் அறிவித்திருந்தது. அதன்படி ஹோண்டா நிறுவனம் வரும் மார்ச் 29ம் தேதி தனது எலெக்டரிக் டூவீலர்கள் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடப்பவோதக அறிவித்துள்ளது.

மார்ச் 29ம் தேதி ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுதா? பெரிய சம்பவத்திற்குக் காத்திருக்கும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் இதுவரை தனது முதல் இவி வாகனம் குறித்த தகவலை வெளியிடவில்லை. இருந்தாலும் ஸ்கூட்டரில் தான் தனது இவி பயணத்தை ஹோண்டா துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனங்களில் ஸ்கூட்டர்களில் தற்போது ஆக்டிவா தான் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. தற்போது அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் என்றால் ஆக்டிவா தான்.

இதனால் ஹோண்டா தனது முதல் தயாரிப்பு மிகப்பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்பதால் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை தான் எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மார்ச் 29ம் தேதியே நடக்குமா என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் இது குறித்த முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் வரும் மார்ச் 29ம் தேதி அதற்கான திட்ட அறிவிப்புகள் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் களம் இறங்கினால் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படும். இதனால் ஹோண்டா நிறுவனம் எச்பி நிறுவனத்துடன் இதற்காக கை கோர்த்துள்ளதாகவும், எச்பி பெட்ரோல் பங்கில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்வாப்பபிள் பேட்டரி மூலம் செயல்படும் ஸ்கூட்டராக இருக்கும் எனவும், இது ஒகினாவா, ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய ஸ்கூட்டர்களின் மார்கெட்டை குறித்து இறக்கப்படும் என்றும், அதிக பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியாது. ஆனால் லாபகரமான குறைந்த விலை ஸ்கூட்டராக இருக்கும் எனவும் பேசப்படுகிறது.

எது எப்படியோ மார்ச் 29ம் தேதி ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முக்கியமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் வரைவில் டெஸ்டிங் அல்லது வேறு இடங்களில் இருக்கும் ஸ்பை ஷாட்களையும் எதிர்பார்க்கலாம். 2024ல் ஹோண்டா தரமான சம்பவம் செய்யப்போவது மட்டும் உறுதி. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 16:00 [IST]
English summary
Honda plans to reveal electric two wheeler plans on march 29 possibly honda activa
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+