அந்த இரு பைக் மாடலுக்கு அவசர அழைப்பு விடுத்த ஹோண்டா.. ஆக்டிவா உரிமையாளர்கள் இத நினைச்சு கவலைப்பட தேவையில்ல!
இந்தியர்களின் ஃபேவரிட் டூ-வீலர் பிராண்டுகளில் ஒன்றாக ஹோண்டா (Honda) இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பான ஆக்டிவாவிற்கு இந்தியர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மாடலான ஹீரோ ஸ்பிளென்டர் (Hero Splender)-க்கே மிக சிறந்த போட்டியாளன் இதுதான்.
ஹோண்டா நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு மட்டுமில்லைங்க, அதன் மேலும் சில டூ-வீலர் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களான ஹைனஸ் சிபி350 (CB350) மற்றும் சிபி350ஆர்எஸ் (CB350RS) ஆகிய மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டும் நிறுவனத்தின் பிரீமியம் இருசக்கர வாகன விற்பனை மையமான பிக்விங் வாயிலாகவே விற்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த இரண்டு டூ-வீலர் மாடல்களுக்கும் அவசர அழைப்பு விடுத்து இருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். இந்த அவசர அழைப்பானது, உற்பத்தியின்போது ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் விதமாக விடுக்கப்பட்டது ஆகும்.
இந்த அழைப்பின்கீழ் கோளாறு இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கும் பாகம் அனைத்தும் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்பட இருக்கின்றன. இப்போது, நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி ஆக்டோபர் 2020 மற்றும் ஜனவரி 2023 ஆகிய மாதங்களில் தயாரிக்கப்பட்ட ஹைனஸ் சிபி350 மற்றும் சிபி 350ஆர்எஸ் பைக் மாடல்களிலேயே கோளாறான பாகம் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், அந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கே தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. முதல் கோளாறாக மோட்டார்சைக்கிளின் பின் பக்கத்தில் உள்ள ஸ்டாப் லைட்டுகளை ஆன் செய்யும் சுவிட்சில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பொதுவாக இந்த சுவிட்சானது பிரேக்கைப் பிடிக்கும்போது, பிரேக் பெடல் வாயிலாக ஆக்டிவேட் செய்யப்பட்டு ஒளிரச் செய்யும்.
ஆனால், இதில் உள்ள ரப்பர் பாகம் ஒன்று பழுதடைந்து இருப்பதால் இந்த செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆகையால், பிரேக் பிடிக்கும்போது இந்த லைட் எரிவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலை பின்னால் வருபவர்களைக் குழம்பச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே ஹோண்டா இந்த பிரச்னையை முக்கிய பிரச்னையாகக் கருத்தில் கொண்டு அதை சரி செய்யும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதுதவிர பைக்கின் முக்கி ஆங்கிள் ஒன்றை பற்ற வைத்ததிலும் சிக்கல் இருப்பதுக் கண்டறியப்பட்டு இருக்கின்றது. சரியாக பற்ற வைக்காததன் காரணத்தினால் அதில் துளை இருக்கும் நிலை தென்படுகின்றது.
இந்த துளை வாயிலாக நீர் உட்பகுந்து இருசக்கர வாகனத்தின் சட்டத்தில் பாதிப்பு ஏற்படலாம் என கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த பாதிப்பானது 2020 அக்டோபர் மற்றும் 2021 டிசம்பர் ஆகிய மாதங்களில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டு சிக்கல்களும் இப்போதைய ஒரே அழைப்பில் சரி செய்யப்பட இருக்கின்றன.
உத்தரவாத சிக்கல் இருப்பினும், இந்த சிக்கல்களை இலவசமாக ஹோண்டா சரி செய்யும் என கூறப்படுகின்றது. உங்கள் வாகனத்திலும் இந்த மாதிரியான சிக்கல் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் என்றால், இதுகுறித்து உங்கள் விற்பனையாளரை அணுகலாம். ஹைனஸ் சிபி350 மற்றும் சிபி 350ஆர்எஸ், இரு பைக் மாடல்களிலும் 350சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் டிஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஜிபிஎம்-எஃப்ஐ தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட எஞ்சின் ஆகும். இந்தமோட்டார் அதிகபட்சமாக 15.5 கிலோவாட் திறனையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகளும் இந்த பைக் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பம்சங்களாக அட்வான்ஸ்ட் திறன் கொண்ட டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோ மீட்டர் போன்றவையும் இந்த பைக்குகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த இரண்டு மாடல்களைக் காட்டிலும் மிகுந்த ரெட்ரோ தோற்றத்தில் சிபி350 எனும் மாடலை சமீபத்தில் ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்கியது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350க்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட மற்றுமொரு தயாரிப்பே இது ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.1.99லட்சம் ஆகும். உயர்நிலை தேர்வு ரூ. 2.17 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. விலையிலும் அந்த இரண்டு மாடல்களைக் காட்டிலும் மலிவானதாக இந்த தயாரிப்புக் காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற வாகனங்கள் உற்பத்தி கோளாறு காரணமாக இந்தியாவில் அழைக்கப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற அழைப்புகளை வாகன உற்பத்தியாளர்கள் விடுத்திருக்கின்றனர். மாருதி சுஸுகி தொடங்கி மஹிந்திரா வரையிலான முன்னணி கார் உற்பத்தியாளர்கள்கூட இதுமாதிரியான அழைப்பை விடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









