ஆக்டிவாவை சேல்ஸ் பண்ணி போரடிச்சு போச்சு.. புதுசா ஒரு மோட்டார்சைக்கிளை கொண்டாரோம்.. டீசரை வெளியிட்ட ஹோண்டா!
சமீப சில தினங்களாகவே ஹோண்டா (Honda) நிறுவனம் புதிதாக ஓர் பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்திருக்கின்றது. அதாவது, புதுமுக இருசக்கர வாகனத்தின் இந்திய வருகையை உறுதி செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (Honda Motorcycle & Scooter India) உற்பத்தி நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பலவற்றிற்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மிக சிறந்த உதாரணமாக ஆக்டிவா இருக்கின்றது. இதன் சேல்ஸ் எப்போதும் உயர் மட்டத்திலேயே இந்தியாவில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றின் வாயிலாகவும் இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாக கவர வேண்டும் என்கிற எண்ணம் ஹோண்டா நிறுவனத்திற்கு வந்திருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே நிறுவனம் விரைவில் ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தை நம் நாட்டில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் சார்பில் இந்த தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்தநிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் புதிய டீசர் படம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
இது ஹோண்டாவின் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்து உள்ளது. சொல்லப்போனால் டீசர் படம் இருசக்கர வாகனத்தின் முழு பிம்பத்தையும் வெளிக்காட்டும் வகையில் இல்லை. அது, எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் கொஞ்சம் தெரிந்தும், பல்வேறு பாகங்கள் மறைக்கப்பட்ட நிலையிலும் உள்ளது.
இதனால்தான் இது என்ன வாகனமாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படத் தொடங்கி இருக்கின்றது. அதேவேளையில், ஹோண்டா நிறுவனம் யூனிகார்னை தழுவி புதிய இருசக்கர வாகனத்தை உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஒருவேளை அந்த பைக்தான் இதுவோ என்கிற சந்தேகமும் எழும்பி இருக்கின்றது.
இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விரைவிலேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட இருக்கின்றது. ஆமாங்க சீக்கிரமே ஹோண்டா தன்னுடைய புதிய பைக்கை விரைவிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, அந்த வாகனம் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த வாகனம் 150 சிசி-180 சிசி பிரிவிலேயே விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. 160 சிசி பிரிவிற்கான எஸ்பி 160 மாடலாக அது இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் வாகன உலகில் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், இதுவரை இருசக்கர வாகனத்தின் சிசி பற்றியோ அல்லது மாடல் பற்றியோ நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளையில், இப்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படத்தின் வாயிலாக புதிய இருசக்கர வாகனம் இதுவரை நிறுவனம் தயாரித்திராத ஓர் புதிய ஸ்டைல் கொண்ட வாகனமாக இருக்கும் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே இந்தியர்கள் மத்தியில் இந்த வாகனத்தின்மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
கொஞ்சம் முரட்டுத் தனமான தோற்றத்தில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலராக அது இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு இந்த மோட்டார் சைக்கிள் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் எழுப்பி இருக்கின்றது. குறிப்பாக பிரீமியம் அம்சங்கள் இந்த இருசக்கர வாகனத்தில் மிக மிக தாராளமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், செல்போன் இணைப்பு, செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல் மற்றும் குறுஞ்செய்திகளைக் காணுதல் போன்ற அம்சங்கள் எல்லாம் எதிர்பார்க்கப்படுகின்றன. ஹோண்டா நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகன மாடலாக யூனிகார்ன் உள்ளது. இதை தழுவி இந்த வாகனம் உருவாக்கப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் அந்த வாகனத்தின் பக்கம் இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதுமுக வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹோண்டா நிறுவனம் தன்னுடைய புதிய டூ-வீலர் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு வரவேற்பு எப்படி கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








