கொடல உறுவுற சம்பவம் உறுதி! வருகிறது ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஜப்பான் இன்ஜினியர்கள் இறங்கீட்டாங்க!

ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 (Japan Mobility Show 2023) வாகன திருவிழா, தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏகப்பட்ட புதிய தயாரிப்புகளை எல்லாம் ஹோண்டா (Honda) நிறுவனம் காட்சிப்படுத்தி கொண்டுள்ளது.

இதுதவிர பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் ஹோண்டா காட்சிப்படுத்தி வருகிறது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாகன திருவிழாவில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் (Electric Scooter Concept) ஒன்றை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.

Honda SC e: Electric Scooter Concept

இதனை எஸ்சி இ: கான்செப்ட் (SC e: Concept) என ஹோண்டா நிறுவனம் அழைக்கிறது. இதன் டிசைன் (Design) அம்சங்களை வைத்து பார்க்கையில், இது நகர்ப்புற பயணங்களுக்கானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டின் முன் பகுதியில் முழு அகலத்திற்கும் எல்இடி பகல் நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு தனித்துவமாக இருக்கிறது. அத்துடன் ஆங்காங்கே நீல நிற ஹைலைட்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை கொடுக்கிறது.

Honda Activa 6G

அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் ரிலாக்ஸ் ஆன முறையிலும், சௌகரியமான முறையிலும் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டில் வழங்கப்பட்டுள்ள சிங்கிள் பீஸ் இருக்கை, நீளமாகவும், அகலமாகவும் உள்ளது.

எனவே ரைடர் மற்றும் பில்லியன் என இருவரும் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டில், இருக்கைக்கு அடியில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே முன் பகுதியில் உள்ள ஃப்ளோர் போர்டில், பொருட்களை வைத்து கொண்டு செல்ல முடியும்.

ஆனால் இருக்கைக்கு அடியில் கிடைக்க கூடிய இடவசதியை மறந்து விட வேண்டியதுதான். வேண்டுமானால் ஹெல்மெட் அல்லது அது போன்ற சிறிய பொருட்கள் எதையாவது மட்டும் அங்கு வைத்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டின் முன் பகுதியில் 'ஸ்டோரேஜ் ஸ்பேஸ்' எதையும் பார்க்க முடியவில்லை.

இது ஸ்கூட்டர் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு அம்சம் ஆகும். ஏனெனில் இங்கு தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து கொள்ள முடியும். ஆனால் ஹோண்டா எஸ்சி இ: கான்செப்ட் மாடல், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது, இந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற அம்சங்களை பொறுத்தவரையில், ப்ளூடூத் சார்ந்த கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படலாம். ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 வாகன திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹோண்டா எஸ்சி இ: கான்செப்ட் மாடலில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான செவ்வக வடிவ அம்சத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், '2 ஸ்வாப்பபிள் பேட்டரிகள்' வழங்கப்படலாம். இதனை ஹோண்டா நிறுவனம் 'மொபைல் பவர் பேக்' என குறிப்பிடுகிறது. ஆனால் இது குறித்த எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பான ரேஞ்ச் (Range) மற்றும் வேகத்தை கொண்டிருக்கும் என்று மட்டும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 10 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் எஸ்சி இ: கான்செப்ட் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டில் நாம் இன்னும் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Honda Activa Electric) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயம்தான். அனேகமாக இந்த எஸ்சி இ: கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் என்ற பெயரில் இந்தியாவில் களமிறக்கப்படலாம்.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஹோண்டா நிறுவனத்தின் ஜப்பான் மற்றும் இந்திய இன்ஜினியர்கள் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த சூழலில் எஸ்சி இ: கான்செப்ட் மாடல், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 12:48 [IST]
English summary
Honda sc e electric scooter concept showcased at japan mobility show top things to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+