சார்ஜ் போட தனியா நேரம் ஒதுக்க தேவையில்ல! ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 பேட்டரி வரப்போகுது!

ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த போவதற்கான அறிகுறி தற்போது தென்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மிகப்பெரிய சந்தையாக மாறி வருகிறது. இந்திய மக்கள் பலர் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஸ்கூட்டர் செக்மெண்டில் பெட்ரோல் ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் சிறப்பான விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டராக இருக்கிறது.

activa electric scooter

இந்நிலையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. படிப்படியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் பெட்ரோல் ஸ்கூட்டர் விற்பனைக்கு நிகராக மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆய்வுகள் மற்றும் டெவலப்மெண்ட்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது இஎம் 1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆட்டோமொபைல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹோண்டா நிறுவனம் பல முக்கியமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது.

activa electric scooter

இதில் ஹோண்டா நிறுவனம் தனது எஸ்சி: இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனம் தற்போது இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கான்செப்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக மட்டுமே வைத்துள்ளது. இதை அப்டேட் செய்து தயாரிக்கும் திட்டம் இதுவரை கொண்டாட நிறுவனத்திடம் இல்லை என்றே தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்க்கும்போது கிட்டத்தட்ட இது இந்தியாவில் விற்பனையாகவும் ஆக்டிவா ஸ்கூட்டரை போலவே இருக்கிறது.

இந்நிறுவனம் இந்த ஸ்கூட்டர்வெற்றி பெற்றால் இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை ஆக்டிவா பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா அறிமுகப்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கிறது.முக்கியமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் ஏற்ற நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு மற்றொரு பேட்டரியில் வாகனத்தை இயக்கலாம். அந்த பேட்டரி தீர்ந்தவுடன் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.

activa electric scooter

மேலும் ஹோண்டா நிறுவனம் இந்த எஸ்சி: இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்மூத் ஆகவும் பவர்ஃபுல்லாகவும் ரைடு செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றியுள்ளது. தினந்தோறும் ஸ்கூட்டரை பயன்படுத்தும் மக்களுக்காகவே இந்த ஸ்கூட்டரை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. குறைவான சத்தம் மற்றும் வைப்ரேஷன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக வேகம் மற்றும் அதிக ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகபட்சமான வேகம் என்ன மற்றும் இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் என்ன என்ற விவரம் எல்லாம் இதுவரை வெளியாகவில்லை . அதேபோல இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மற்றும் பேட்டரி குறித்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவை பொறுத்தவரை ஹோண்டா ஆக்டிவா என்ற பெயர் பிரபலமாக இருப்பதால் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமான இந்த ஸ்கூட்டரின் ஷார்ப்பான லைட்டிங் அம்சங்கள் ஸ்மூத் ஃப்ளோயிங் கொண்ட பாடி பேனல்கள், சிங்கிள் பீஸ் சீட், பிளாட்டான ஃப்ளோர் போர்டு, சரியாக பொருத்தப்பட்டுள்ள சைடு ஸ்டாண்ட், ஆகிய இந்த ஸ்கூட்டருக்கு அம்சமான லுக்கை கொடுக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்க்கும்போதே இது ஆக்டிவா தோற்றத்தை கொண்டுள்ளதால் இந்தியாவில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்பொழுது வரும் என காத்திருக்கிறார்கள். ஹோண்டா நிறுவனம் காலம் தாழ்த்தாமல் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மார்க்கெட்டில் நல்ல இடத்தை கிடைக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 25, 2023, 20:34 [IST]
English summary
Honda set to introduce the sc e concept electric scooter as activa ev in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X