சொன்ன மாதிரியே விலை குறைவான பைக்கை களமிறக்கிய ஹோண்டா! ஹீரோ ஸ்பிளெண்டர் பொழப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் பைக்குகள் (Bikes) மற்றும் ஸ்கூட்டர்களுக்கு (Scooters) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளில் இன்ஜின் 'ஸ்மூத்' ஆக இருப்பதும், எவ்வளவு தூரம் ஓட்டினாலும் சோர்வு ஏற்படாமல் இருப்பதும்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

இந்த சூழலில் இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்வதற்காக புதிய 100 சிசி பைக் ஒன்றை மார்ச் 15ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சொன்ன மாதிரியே விலை குறைவான பைக்கை களமிறக்கிய ஹோண்டா! ஹீரோ ஸ்பிளெண்டர் பொழப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) என்ற பெயரில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், புத்தம் புதிய 99.7 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.6 ஹெச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த புத்தம் புதிய இன்ஜின் இ20 எரிபொருளில் (E20 Fuel) இயங்க கூடிய திறன் வாய்ந்தது. இ20 எரிபொருள் என்பது, 80 சதவீதம் பெட்ரோல் (Petrol) மற்றும் 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலந்த கலவையாகும். இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளிலும் சுலபமாக பயணம் செய்ய கூடிய வகையில், இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ளது.

சொன்ன மாதிரியே விலை குறைவான பைக்கை களமிறக்கிய ஹோண்டா! ஹீரோ ஸ்பிளெண்டர் பொழப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

அத்துடன் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய வகையிலும் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது ஹாலோஜன் ஹெட்லைட் ஆகும். அதே நேரத்தில் புதிய ஹோண்டா ஷைன் 100 பைக், மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அவை சிகப்பு, நீலம், பச்சை, கோல்டு மற்றும் க்ரே ஆகியவை ஆகும். இவை அனைத்துடனும் கருப்பு நிறமும் இடம்பெற்றிருக்கும். இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus), ஹீரோ ஹெச்எஃப் 100 (Hero HF 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) ஆகிய பைக்குகளுடன், ஹோண்டா ஷைன் 100 பைக் போட்டியிடும்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விலை (Price) 64,900 ரூபாய் மட்டும்தான். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே பின் நாட்களில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ளதால், இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 14:45 [IST]
English summary
Honda shine 100 launched in india price bookings all details you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+