விலை குறைவான ஹோண்டா பைக்கின் தயாரிப்பு தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! ஸ்பிளெண்டர் சோலி முடின்ச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100). கடந்த மார்ச் 15ம் தேதிதான், ஹோண்டா ஷைன் 100 பைக் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய விலை (Price) குறைவான பைக் ஆகும்.

இந்த சூழலில் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி (Production) பணி தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நர்சபுரா பகுதியில் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்குதான் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Honda Shine 100

ஹோண்டா ஷைன் 100 பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் மே 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. அன்றைய தினத்தில் இருந்து நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா ஷைன் 100 பைக் கிடைக்கும். இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

எனவே ஹோண்டா ஷைன் 100 பைக்கை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. ஹோண்டா ஷைன் 100 பைக்கில், புத்தம் புதிய 98.98 சிசி பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், OBD2 (On-board Diagnostics) விதிமுறைகளுக்கு இணக்கமானது.

Honda Shine 100 Badge

ஹோண்டா ஷைன் 100 பைக், ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) ஆகிய போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்குகள் மட்டுமல்லாது, ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) பைக்கிற்கும், ஹோண்டா ஷைன் 100 விற்பனையில் கடுமையான போட்டியை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹோண்டா நிறுவனம் ஷைன் 100 பைக்கிற்கு வெறும் 64,900 ரூபாயை மட்டுமே விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோண்டா ஷைன் 100 பைக் இன்ஜினின் பவர் அவுட்புட் சுமார் 8 பிஹெச்பி ஆகும். இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கில், கருப்பு நிற அலாய் வீல்கள், அலுமினியம் க்ராப் ரெயில் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா ஷைன் 100 பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை சிகப்பு உடன் கருப்பு, நீலம் உடன் கருப்பு, பச்சை உடன் கருப்பு, கோல்டு உடன் கருப்பு, க்ரே உடன் கருப்பு ஆகியவை ஆகும். இதுபோன்ற அம்சங்கள் காரணமாக ஹோண்டா ஷைன் 100 பைக் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஷைன் 100 பைக்கை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். எங்களை பல்வேறு விதங்களிலும் இந்த பைக் கவர்ந்துள்ளது. எனவே ஓரளவிற்கு குறைந்த விலையில், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 3, 2023, 23:56 [IST]
English summary
Honda shine 100 production starts price mileage all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+