இது தங்கமுங்க... ஏன்டா வாங்கினோமோனு ஒரு நாளும் யோசிக்க மாட்டீங்க... ஹோண்டா ஷைன் 100 ரிவியூ!

பெரும்பாலான இந்தியர்களுக்கு இருசக்கர வாகனமே பிடித்தமான வாகனமாக இருக்கின்றது. குறிப்பாக, 100 சிசி (100cc) மோட்டார்சைக்கிள்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் அவை என்பதால், அவற்றிற்கு டிமாண்ட் எப்போதும் உச்சத்தில் இருக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக அப்பிரிவில் குறைந்தபட்சம் ஒற்றை மாடலையாவது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த பிரிவை ஹீரோ மற்றும் ஹோண்டா இந்த இரு நிறுவனங்களே ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கின்றன.

Honda shine 100 review

ஹீரோ நிறுவனம் இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஸ்பிளெண்டர் பைக்கை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக் மாடலுக்கு போட்டி அளிக்கும் விதமாகவே ஹோண்டா நிறுவனம் புதிதாக ஷைன் பைக் மாடலின் 100 சிசி பைக்கை அண்மையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த பைக்கையே நமது டிரைவ்ஸ்பார்க் குழு சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்த்தது. இந்த ரைடு ரிவியூ வாயிலாக எங்களுக்கு அப்பைக் பற்றி கிடைத்த பல்வேறு முக்கியமான மற்றும் சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Honda shine 100 badge

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்: ஹோண்டா நிறுவனம் அதன் ஷைன் 125 சிசி பைக்கின் ஸ்டைலை தழுவியே ஷைன் 100 மாடலை தயார் செய்திருக்கின்றது. ஆகையால், கொஞ்சம் தொலைவில் இருந்து பார்த்தால் இதை 125சிசி ஷைன் என்றே பலர் நினைப்பர்.

அதேவேளையில், ஷைன் 100ஐ ஷைன் 125 இடமிருந்து மாறுபட்டு காட்சியளிக்கச் செய்வதற்காக கணிசமான அளவு மாற்று அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் டைப் ஹாலோஜன் ரக ஹெட்லேம்பே ஷைன் 100இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹெட்லைட்டை போலவே இதன் இன்டிகேட்டர்களும் ஹாலோஜன் ரக பல்பையேக் கொண்டிருக்கின்றன.

Honda shine 100 engine

ஏற்கனவே கூறியதை போல் இதன் கவுல் (cowl) ஷைன் 125 இல் இருப்பதைப் போலவே இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மேட் பூச்சுக் கொண்ட ஃபெண்டர், 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் என எக்கசக்க அம்சங்கள் இந்த ஹோண்டா ஷைன் 100இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக 5 விதமான நிற தேர்வுகளில் ஷைன் 100ஐ வாங்கிக் கொள்ள முடியும். சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் மற்றும் சாம்பல் ஆகிய நிற தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது. பைக்கின் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்காக சைடு பேனல்களில் கோடு போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

Honda shine 100 review exhaust

அதேவேளையில் அடிப்படை நிறமாக அனைத்து வண்ண தேர்வுகளில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. நீளமான இருக்கை, low-slung ரக இருக்கை மற்றும் கிரிப்பான கை பிடிகளும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதியை போலவே பின் பக்கமும் சற்று கவர்ச்சியானதாகவே இருக்கின்றது.

இதன் டெயில் லைட்டுகளிலும் ஹாலோஜன் ரக பல்புகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, கூடுதல் சிறப்பு வசதிகளாக வழக்கமான இன்ஸ்ட்ரூமென்டேசன், ட்வின் அனலாக் பாட்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை பன்முக முக்கியமான தகவல்களை வழங்கும் திறன் கொண்டவை ஆகும். மேனுவல் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் அம்சம் ஆகியவை இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Honda shine 100 fuel tank

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டைமன்ஷன்கள் மற்றும் ஸ்பெக் விபரம்: ஹோண்டா நிறுவனம் ஷைன் 100 பைக்கை ஓபிடி2 விதிகளுக்கு ஏற்ற வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க இதனால் இ20 ரக பெட்ரோலிலும் ஓட முடியும். அதாவது, 20 சதவீதம் பெட்ரோல் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட ஃப்யூவலிலும் ஷைன் 100 இயங்கும்.

99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே ஷைன் 100ல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 7.5 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரில் சோலனாய்டு வால்வு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது தானியங்கி சோக்காக செயல்படும். பைக்கை எந்த நேரத்திலும் சுலபமாக ஸ்டார்ட் செய்ய இது உதவியாக இருக்கும்.

Honda shine 100 seat

இதுதவிர, மிக சுலபமான பராமரிப்பை வழங்கவும், பராமரிப்பு செலவைக் குறைக்கவும் ஷைன் 100இல் ஃப்யூவல் பம்ப் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் உருவாக்கத்தில் டைமண்ட் ஃப்ரேம் சேஸிஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்ற டூ-வீலராக ஷைன் 100 காட்சியளிக்க இந்த அம்சமும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக புதிய ஷைன் 100 பைக்கில் டிரம் பிரேக் அம்சமே வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து 17 அங்குல அலாய் வீல்களும் பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹோண்டா ஷைன் பைக்கின் ஒட்டுமொத்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 செமீ ஆகும். ரைடு உயரம் 768 மிமீ ஆகும். வீல்பேஸ் 1,245ஆக உள்ளது.

Honda shine 100 side

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ரைடிங் இம்ப்ரெஷன்ஸ்: இதில் புதிய ஏர் கூல்டு 100 சிசி பைக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிக திறனை வெளியேற்றாது. அதேவேளையில், நல்ல மைலேஜை வழங்கும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிமீ வரையில் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இந்த மைலேஜ் திறனை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யவில்லை. ஷைன் 100இன் எஞ்ஜின் அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்படவில்லை என்றாலும் இதன் பவர்-பிளாண்ட் மிக சிறந்த மிட்-என்ட் கிரண்டை வழங்குகின்றது. அதாவது, அதிக கியரில் இருக்கும்போதும் குறைவான வேகத்தில் செல்ல இந்த அம்சம் அனுமதிக்கின்றது.

Honda shine 100 wheel

அது ஸ்மூத்தான ரைடாகவும் இருந்தது. புதிய ஷைன் மணிக்கு 100 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடே இதுவாகும். பைக்கில் குறைவான வேகத்தில் செல்லும்போது அதிர்வுகள் மிகக் குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில், மணிக்கு 65 கிமீ வேகத்தை நீங்கள் எட்டினால் ஹேண்டில் பார் மற்றும் ஃபூட்ரெஸ்ட்டுகளில் சற்று லேசாக வைப்ரேசனை உணர்வீர்கள்.

ஹோண்டா ஷைன் 100இன் சஸ்பென்ஷன் மிகவும் மென்மையானதாக இருக்கின்றது. கரடு-முரடான சாலையில் கூட ஸ்மூத்தாக செல்ல இது அனுமதிக்கின்றது. 677 மிமீ நீளமான இருக்கையே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அகலமும் சற்று அதிகமாக இருக்கின்றது. மிக சிறந்த சவாரி அனுபவத்தை வழங்க இந்த இருக்கையும் உறுதுணையாக இருக்கின்றது. இரண்டு பேர் மிக தாராளமான இட வசதியுடன் பயணிக்க இது அனுமதிக்கின்றது.

Honda shine 100 rear foot peg

இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் சிபிஎஸ் (combi-braking system) உடன் கூடிய டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் 130 மிமீ அளவுள்ள டிரம் பிரேக்கும், பின் வீலில் 110 மிமீ அளவுள்ள டிரம்மும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவை மிக சிறந்த நிறுத்த அனுபவத்தை வழங்குகின்றன. ஆனால், முன் பக்கத்திற்கு இன்னும் ஷார்ப்பானதாக இருந்திருக்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

Honda shine 100 front profile

ஹோண்டா ஷைன் 100 பற்றிய எங்களின் சொந்தக் கருத்துகள்: இந்த பைக் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் ஆகும். ஏற்கனவே இந்தியாவில் ஷைன் பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதற்கு கிடைக்கும் வரவேற்பு இரட்டிப்பாக்கும் விதமாக புதிய 100 சிசி பைக்கை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இது நிச்சயம் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சிறந்த எஞ்ஜின் திறன், சூப்பரான மைலேஜ் திறன் மற்றும் சிறப்பான சவாரி அனுபவம் ஆகியவற்றைத் தர கூடிய தயாரிப்பாக ஷைன்100 காட்சியளிக்கின்றது. இந்த அம்சங்களே ஸ்பிளெண்டருக்கு ஆப்பு வைக்கக் கூடிய வாகனமாக ஷைன்100 மாற்ற இருக்கின்றது. நாம் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற பைக் என இதனை குறிப்பிடலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 11:59 [IST]
English summary
Honda shine 100 review design features specs and riding impressions details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X