ஹோண்டா ஷைன் என்றால் சும்மாவா!! ஹீரோ, பஜாஜ்க்கு போட்டியா தரமான சம்பவம்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான ஷைன் விற்பனையில் புதிய ரெக்கார்டை படைத்துள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் 125சிசி பைக்குகள் பிரிவின் ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை ஹோண்டா ஷைன் நிரூபித்துள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையிலான மோட்டார்சைக்கிள்களுக்கே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஹோண்டா ஷைன் போன்ற பட்ஜெட் விலை பைக்குகள் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுவதுதான் அதற்கு சாட்சியாகும்.

Honda Shine Sets New Record

இதனாலேயே, ஹோண்டா ஷைன் போன்ற பைக்குகளால் குறிப்பிட்ட கால இடைவெளியில் புது, புது ரெக்கார்ட்களை செட் செய்ய முடிகிறது. இந்த வகையில், ஹோண்டா ஷைன் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. அதாவது, மேற்கு இந்திய மண்டலத்தில் ஹோண்டா ஷைன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 30 இலட்சத்தை வெற்றிக்கரமாக கடந்துள்ளது.

மேற்கு இந்தியாவில், முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 11 வருடங்களில் ஷைன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது. ஆனால், அடுத்த 15 இலட்ச ஷைன் பைக்குகள் விற்பனை எண்ணிக்கையை வழக்கத்தை காட்டிலும் 2 மடங்கு வேகமாக வெறும் 6.5 வருடங்களில் ஹோண்டா கடந்துள்ளது.

Honda Shine Sets New Record

இந்த செய்தியில் மேற்கு இந்திய மண்டலமாக குறிப்பிடப்படுபவை குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்கள் ஆகும். இதில் மஹாராஷ்டிராவில் தான் அதிக ஷைன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மஹாராஷ்டிராவில் மட்டும் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஷைன் பைக்குகளை இதுவரையில் ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

ஷைன் 125 பைக் மட்டுமின்றி, அதன் பிரீமியம் வெர்சனான எஸ்பி125 பைக்கையும் 125சிசி பைக்குகள் பிரிவில் ஹோண்டா விற்பனை செய்கிறது. இவை இரண்டும் தான் மேற்கு இந்திய மண்டலத்தில் அதிகம் விற்பனையாகும் இரு பைக்குகளாக விளங்குகின்றன. இந்த மண்டலத்தில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படும் இரு 125சிசி பைக்குகளுள் ஒன்று ஹோண்டா நிறுவனத்துடையதாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Honda Shine Sets New Record

இதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்திலும் எஸ்பி125 பைக்கில் புதிய ஸ்போர்ட்ஸ் எடிசனை ஹோண்டா சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஹோண்டா எஸ்பி125 பைக்கில் பொருத்தப்படும் 123.94சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 8 கிலோ வாட்ஸ் மற்றும் 10.9 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா பைக் என்றாலே ஷைன் பைக் மட்டும் தான் என நினைப்பவர்களும் உண்டு. அந்த அளவிற்கு, ஷைன் பைக்குகள் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளன. இருப்பினும், வெறும் 3 மாநிலங்களில் 30 இலட்ச ஷைன் பைக்குகள் விற்பனை என்பது உண்மையில் ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2023, 22:07 [IST]
English summary
Honda shine sets new record in indian 125cc motorcycle segment full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X