சுத்தி-சுத்தி வந்து பாத்துட்டோம்.. பைக்கை அட்டகாசமா ஹோண்டா ரெடி பண்ணியிருக்கு! வீடியோவை பாருங்க!

ஹோண்டா எஸ்பி 160 பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 1.17 லட்சம் என்கிற விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் யூனிகார்ன் 160 பைக்கைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மோட்டார்சைக்கிளை இதன் ஹோண்டா தயார் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கில் என்ன மாதிரியான அம்சங்களை ஹோண்டா சேர்த்திருக்கின்றது? அதன் டிசைன் எப்படி இருக்கின்றது? என்பது பற்றிய தகவலையே உங்களுக்கு தெளிவாக விளக்கும் விதமாக பிரத்யேக வீடியோவை வெளியிட்டு இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். புதிய ஹோண்டா எஸ்பி 160 பற்றி அனைத்து சுவாரஷ்யமான தகவல்களும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை பல்சர் பி150 மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. யூனிகார்னுக்கு ஒரு படி மேல் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவரை 162 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதே எஞ்ஜின்தான் யூனிகார்ன் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Honda sp 160 walkaround video

இந்த மோட்டார் அதிகபட்சமாக 13.5எச்பி பவரையும், 14.6என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்ஜினில் இணைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டிஸ்க் பிரேக் மற்றும் ரெட்டை டிஸ்க் பிரேக் என இரு விதமான வேரியண்டுகளில் புதிய எஸ்பி160 விற்பனைக்குக் கிடைக்கும். மேலே பார்த்தது ஒற்றை டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ஆகும். இதன் டூயல் சேனல் டிஸ்க் பிரேக் ரூ. 1,21,900க்கு விற்கப்பட உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 8, 2023, 17:30 [IST]
English summary
Honda sp 160 bike walkaround video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+