ஹோண்டா இந்த பைக்கை மீண்டும் தயாரிக்கபோகுதா! ஆக்டிவா இனி சேல்ஸான மாதிரிதான்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புத்தம் புதிய 160 சிசி மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவிற்காக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன மாடல்?, அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹோண்டா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்திய இருசக்கர வாகன உலகத்தை அதகளப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஷைன் 100 (குறைவான விலை பைக்) மற்றும் டியோ 125 ஆகிய இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கியது.

இதில் சிறப்பு என்னவென்றால் டியோ 125 இல் ஸ்மார்ட் எனும் தேர்வை ஹோண்டா வழங்கி இருப்பதுதான். பலதரப்பட்ட ஸ்மார்ட் அம்சங்களை அதுக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே அத்தேர்விற்கு ஸ்மார்ட் என பெயரிடப்பட்டது. கார்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஸ்மார்ட் சாவி இந்த தேர்விற்கு வழங்கப்படுகின்றது.
இந்த ரிமோட் சாவி வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே ஸ்கூட்டரின் சில அம்சங்களைக் கன்ட்ரோல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான தயாரிப்பை வழங்கிய கையோடு இன்னும் ஒரு சில சூப்பரான டூ-வீலர் மாடல்களையும் இந்தியர்களுக்காக அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே விரைவில் ஓர் புத்தம் புதிய 160 சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிராண்ட் நியூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தற்போது விற்பனையில் இருக்கும் புகழ்பெற்ற யூனிகார்ன் பைக் மாடலை தழுவியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் ஹோண்டா எஸ்பி 160 என்கிற பெயரில் அது விற்பனைக்கு வரலாம் எனவும் தெரிகின்றது. இந்த தகவல் ஹோண்டா யூனிகார்ன் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக வரும் ஏதேனும் ஓர் பண்டிகை நாளில் இதன் அறிமுகத்தைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

யூனிகார்ன் மோட்டார்சைக்கிளைப் போலவே இதுவும் சற்று அதிகம் பிரீமியம் தர மோட்டார்சைக்கிளாக விற்பனைக்கு வர இருக்கின்றது. அதாவது, நடுத்தர டிஜிட்டல் திரை, 17-18 அங்குல வீல்கள், டிஸ்க் மற்றும் ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பலதரப்பட்ட அம்சங்கள் புதியி எஸ்பி 160 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்ஜினை பொருத்தவரை 162.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் 12.9 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் நல்ல மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தையும் அது வழங்கும். ஆனால், இந்த வாகனம் என்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய விபரங்களையும் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம். இது இன்னும் ஒரு சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மோட்டார்சைக்கிளுக்கு ஆக்டிவாவிற்கு இணையாக நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், வசதிகளில் இந்த ஸ்கூட்டரைக் காட்டிலும் மிக சிறந்த தயாரிப்பாக எஸ்பி 160 இருக்கப்போகின்றது. இதுவே இந்த பைக்கின் வருகையின்மீது கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் புதிய தயாரிப்புகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். அந்தவகையிலேயே எஸ்பி 160-க்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









