பைக் செம்ம ஸ்டைலாக இருக்கு!! விலையும் குறைவு... தீபாவளிக்கு ஒண்ணை வாங்கிட வேண்டியதுதான்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அதன் எஸ்பி125 மோட்டார்சைக்கிளில் புதிய ஸ்போர்ட்ஸ் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய ஹோண்டா எஸ்பி125 பைக்கில் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

புதிய ஹோண்டா எஸ்பி125 ஸ்போர்ட்ஸ் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90,567 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹோண்டா எஸ்பி125 பைக் அதன் சவுகரியமான இருக்கை வசதியின் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. இதனுடன், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் இளைஞர்களை கவரும் விதமாக பைக்கிற்கு ஸ்போர்டியரான தோற்றம் வழங்கப்பட்டு உள்ளது.

honda sp125 sports edition launched

புதிய எஸ்பி125 ஸ்போர்ட்ஸ் எடிசன் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு உள்ளன. விருப்பப்படுவோர் ஹோண்டா ரெட் விங் டீலர்ஷிப் ஷோரும் மூலமாக பைக்கை முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் பைக் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய எஸ்பி125 ஸ்போர்ட்ஸ் எடிசனின் அறிமுகம் குறித்து HMSI நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான டிசுடிசுமு ஒடானி, அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஹோண்டா எஸ்பி125 அதன் மேம்பட்ட அம்சங்கள், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் 125சிசி-இல் தினசரி பயன்பாட்டு மோட்டார்சைக்கிள் பிரிவில் த்ரில்லான செயல்திறன் மூலமாக வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், பெட்ரோல் டேங்க்கை மஃப்லர் கவர் மூலமாக முரட்டுத்தனமானதாக மாற்றி உள்ளனர். மேலும், அதற்கேற்ப டேங்கின் மீது கிராஃபிக்ஸையும் ஹோண்டா மாற்றியுள்ளது. டெசண்ட் நீலம் மெட்டாலிக் மற்றும் ஹெவி கிரே மெட்டாலிக் என்கிற 2 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம். இந்த இரு பெயிண்ட் ஆப்ஷன்களிலும் ஆரஞ்ச் நிற லைன்கள் அலாய் சக்கரங்களிலும், பெட்ரோல் டேங்கின் மீதும் வழங்கப்பட்டு உள்ளன.

honda sp125 sports edition launched

முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்டை பெற்றுள்ள புதிய எஸ்பி125 ஸ்போர்ட்ஸ் எடிசன் பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த திரை மூலமாக கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் மைலேஜ் விபரங்களை கூட பெறலாம். எஸ்பி125 பைக்கில் 123.94சிசி, சிங்கிள்-சிலிண்டர் பிஎஸ்6 ஒபிடி2 இணக்கமான PGM-FI என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 கிலோவாட்ஸ் மற்றும் 10.9 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. புதிய ஹோண்டா எஸ்பி125 ஸ்போர்ட்ஸ் எடிசன் பைக்கை 10 வருட உத்தரவாதத்துடன் வாங்க முடியும். அதாவது, முதல் 3 வருட உத்தரவாதம் நிலையாக கிடைத்துவிடும். ஆனால் அடுத்த 7 வருட உத்தரவாதத்தை கூடுதல் கட்டணத்தை செலுத்தியே பெற வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளிக்கு புத்தம் புதிய வாகனங்களை காட்டிலும் இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஏற்கனவே அதன் சில 2-வீலர்களில் ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்துவிட்டது. அந்த வரிசையில் தற்போது எஸ்பி125 பைக்கிலும் ஸ்பெஷல் எடிசனாக ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 15:53 [IST]
English summary
Honda sp125 sports edition launched at rs 90567
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+