ஹோண்டாவின் இந்த மூன்று தயாரிப்பு மட்டும் இந்தியா வந்துச்சு... ஒட்டுமொத்த நாடும் அதோட வசமா மாறிடும்!!

ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் பொறாமைக்கு ஆளாக்கும் வகையில், மூன்று தரமான மற்றும் மிகவும் அழகிய இருசக்கர வாகன மாடல்களை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மூன்றும் ரெட்ரோ ஸ்டைலிலான மொபட் ரக எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

இந்தியர்கள் மத்தியில் இந்த மாதிரியான வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக பஜாஜ் சேத்தக் இருக்கின்றது. ரெட்ரோ கிளாசிக் தோற்றத்திலான இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நாட்டு மக்கள் நல்ல அளவிலான வரவேற்பை வழங்கி வருகின்றனர். இதுமட்டும் இல்லைங்க ஒட்டுமொத்த இந்திய மின் வாகன பிரிவே தற்போது உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டா

அதாவது, நாட்டில் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வெவ்வேறு வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்ட ரெட்ரோ ஸ்டைல் எலெக்ட்ரிக் மொபட்டுகளை சீன சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கின்றது. அனைத்தும் பெடல் அசிஸ்ட் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மொபட்டுகள் ஆகும்.

தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டே இந்த வாகனங்களை சீன சந்தையில் ஹோண்டா களமிறக்கி இருக்கின்றது. கப் இ: (Cub e:), டேக்ஸ் இ: (Dax e:) மற்றும் ஜூமர் இ: (Zoomer e:) ஆகிய ரெட்ரோ மொபட்டுகளையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. உலகளவில் ரெட்ரோ ரக வாகனங்களுக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஹோண்டா

இதன் விளைவாகவே மூன்றையுமே ரெட்ரோ ஸ்டைலில் ஹோண்டா களமிறக்கி இருக்கின்றது. சமீபத்தில் நிறுவனம் ஹாவ்க் 11 கஃபே மற்றும் சிபி 650ஆர் நியோ-ரெட்ரோ ரக பைக்கை அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்தே இந்த மூன்று ரெட்ரோ எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

தோற்றத்தில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் இந்த வாகனங்கள் மின் மோட்டார் மற்றும் ரேஞ்ஜ் திறன் ஆகிய விஷயங்களில் லேசாக ஒத்துப் போகின்றன. ஓர் முழு சார்ஜில் இந்த வாகனங்கள் 64 கிமீ முதல் 90 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் வாகனங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா

இந்த பெயரில் ஹோண்டா இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு வழங்குவது முதல் முறையல்ல. 1958 ஆம் ஆண்டில் இருந்தே இந்த பெயரில் ஹோண்டா டூ-வீலரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆகையால், மிகவும் பரீட்சையமான வாகனமாக கப் பெயர் கொண்ட வாகனம் இருக்கின்றது.

2018 இல் சூப்பர் கப் சி125 எனும் பெயரில் அது நவீன கால வாகனமாக மாற்றப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இது ஐசிஇ மோட்டார் கொண்ட வாகனம் ஆகும். இந்த நிலையிலேயே கப் இ: எனும் பெயரில் எலெக்ட்ரிக் மொபட்டாக அது தற்போது சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ரேஞ்ஜ் திறன் 64 கிமீ ஆகும்.

ஹோண்டா

கப் இ: எலெக்ட்ரிக் மொபட்டைப் போலவே டேக்ஸ் இ: -யும் மங்கி எனும் மாடலை தழுவியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சிறப்புமிக்க வாகனமாகவே டேக்ஸ் இ: சீன சந்தைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை இரண்டைக் காட்டிலும் அதிக அழகான மற்றும் அதிக சிறப்புகள் கொண்ட தயாரிப்பாக ஜூமர் இ: உள்ளது.

49 சிசி திறன் கொண்ட ரக்கஸ் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டதே ஜுமர் இ: இதில் ஓர் ஃபுல் சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை ரேஞ்ஜ் திறனில் வித்தியாசத்துடன் காணப்பட்டாலும் ஸ்பீடு விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

அந்தவகையில், மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் இந்தமாதிரியான குறைந்த வேகம் கொண்ட வாகனங்களை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவு சான்று போன்ற எந்த முக்கிய ஆவணங்களும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2023, 13:10 [IST]
English summary
Honda specially made e mopeds for china
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X