ஒரே வருஷத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாஸ் காட்டிய ஹோண்டா! இது பக்கத்துல கூட யாரும் வர முடியாது!

ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையில் 20% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விற்பனை இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் எத்தனை வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

டிசம்பர் மாதம் துவங்கி விட்ட நிலையில் வரிசையாக வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த நவம்பர் மாதம் தங்கள் விற்பனை நிலவரம் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமும் தனது நவம்பர் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனம் ஒரே ஆண்டில் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

honda two wheeler sales nov 2023

கடந்த நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4,47,849 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் வெறும் 3,73,221 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது இது 20% வளர்ச்சியாகும். ஹோண்டா நிறுவனத்திலும் தற்போது ஹோண்டா ஆக்டிவா, டியோ, யூனிகான் ஆகிய பிரபலமான வாகனங்கள் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. மேலும் கடந்த மாதம் பண்டிகை காலம் என்பதால் அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனையை பொறுத்த வரை 4,27,677 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,53,540 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 19 சதவீத வளர்ச்சி கொண்டதாகும். இதுவே ஏற்றுமதியை பொறுத்தவரை 27,172 வாகனங்கள் கடந்த மாதம் ஏற்றுமதியாகி உள்ளது. இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 19,681 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகிவிட்டது. இதில் 38.06 சதவீத வளர்ச்சியாகும்.

honda two wheeler sales nov 2023

ஹோண்டா நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களை நம்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஹோண்டா ஆக்டிவா என்ற ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக அதிக நம்பிக்கையை பெற்று சிறப்பாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டராக இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் புதிய சிபி 350 என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிபி 350 என்ற பைக் போல ரெட்ரோ ஸ்டைலிங் செய்யப்பட்ட பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மார்க்கெட்டில் உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்க்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை இளைஞர்கள் பலர் விரும்பி வாங்குவார்கள்.

honda two wheeler sales nov 2023

ஹோண்டா நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத விற்பனையை கடந்த அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் விற்பனையான 4,47,849 என்ற விற்பனை எண்ணிக்கையை கடந்த அக்டோபர் மாதம் விற்பனையாக 4,92,884 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 9.14 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 45,035 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

இதுவே உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கிட்டால் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான 42,067 என்ற எண்ணிக்கையை அக்டோபர் மாதம் விற்பனையால் 4,62,747 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 9.09 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 42,070 வாகனங்கள் குறைவாக விற்பனை ஆகி உள்ளன. ஏற்றுமதி விவகாரத்திலும் இதே டிரெண்டு தான் நீடிக்கிறது.

ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 27,172 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் மொத்தம் 30,137 வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது. இதை ஒப்பிட்டால் நவம்பர் மாதம் 2965 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதி செய்துள்ளது இது 9.87% வீழ்ச்சியாகும். மொத்தத்தில் கடந்த நவம்பர் மாத விற்பனை கடந்தாண்டு நவம்பர் மாதத்தை விட சிறப்பாக இருந்தாலும் கடந்த அக்டோபர் மாதத்தை விட குறைவாக தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடந்த அக்டோபர் மாத விற்பனையை விட கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை குறைவாக தான் செய்துள்ளன. அதுவே கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனை மிகப்பெரிய அளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது. இது ஒரு இண்டஸ்ட்ரி ரெண்டு தான்.

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 7:43 [IST]
English summary
Honda two wheeler sales nov 2023 up 20 percent 447849 units sold
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X