நம்ம புள்ளீங்கோ மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்க!! ஹோண்டா டியோ சேல்ஸ் நம்பர் எகிறுது - கடந்த செப்டம்பரில்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து எத்தனை 2-வீலர்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்கிற விபரங்களும் கிடைத்துள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் என்று பார்த்தால், நிச்சயம் அதில் ஒன்றாக ஹோண்டா இருக்கும். ஜப்பானை சேர்ந்த பிரபலமான 2-வீலர் நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது.

honda two-wheelers sales report

இந்திய மார்க்கெட்டில் ஹோண்டாவின் அடையாளமே அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் தான். ஆக்டிவா தான் ஹோண்டாவின் விற்பனையில் கிட்டத்தட்ட 50% பங்கை கொண்டுள்ளது. கிரேஸியா, எக்ஸ்-பிளேட், சிபிஆர்650 போன்ற சில 2-வீலர்களின் விற்பனையை சமீப மாதங்களில் ஹோண்டா நிறுத்திக் கொண்டுள்ளது. இருப்பினும், 2022 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த செப்டம்பரில் ஹோண்டாவின் விற்பனை கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த 2022 செப்டம்பரில் 4,88,950 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 2,852 இருசக்கர வாகனங்கள் அதிகமாக 4,91,802 2-வீலர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. வழக்கம்போல், ஹோண்டாவின் சிறந்த விற்பனை மாடலாக ஆக்டிவா விளங்குகிறது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 2,35,056 ஆகும்.

honda two-wheelers sales report

ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சற்று அதிகமாக 2.45 இலட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, 10,551 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் குறைவான விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மொத்த 100% விற்பனையில் ஆக்டிவாவின் பங்கு 47.79% ஆகும்.

ஆக்டிவாவிற்கு அடுத்து 2வது இடத்தில் சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் 1,35,339 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த 2022 செப்டம்பரில் சிபி ஷைன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 1,45,193 ஆகும். இந்த வகையில், 2022 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் 9,854 சிபி ஷைன் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

honda two-wheelers sales report

ஆனால், 3வது இடத்தில் உள்ள டியோ ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 29,994 டியோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் 38,703 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை கிட்டத்தட்ட 29.04% உயர்ந்துள்ளது.

ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகமான ஷைன் 100 கடந்த செப்டம்பரில் 26,205 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் யூனிகார்னின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 25,514 ஆகும். ஹோண்டா ட்ரீம் மோட்டார்சைக்கிள் 10,643 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதற்கடுத்த அடுத்த இடங்களில் முறையே எஸ்பி160, லிவோ, ஹார்னெட் 2.0 மற்றும் ஹைனெஸ் சிபி350 பைக்குகள் உள்ளன.

honda two-wheelers sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டியோ ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்து வருவது நிச்சயம் ஹோண்டாவுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். புள்ளீங்கோ இளைஞர்கள் மீண்டும் டியோ ஸ்கூட்டரின் பக்கம் வந்திருப்பதை இதை காட்டுகிறது. ஹோண்டாவின் உள்நாட்டு விற்பனையை போல, வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 34,014 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரித்து ஹோண்டா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 8:46 [IST]
English summary
Honda two wheelers sales report 2023 september all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X