ஜப்பான் காரன்... ஜப்பான் காரன் தான்ய்யா!! எல்லாரும் இந்த வாகனத்தை தான் எதிர்காலத்தில் பயன்படுத்த போறோம்!!

ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமாக ஹேண்ட்ஸ்-ப்ரீ பெர்சனல் மொபைலிட்டி கான்செப்ட் வாகனத்தை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்றுவரும் மோட்டார் கண்காட்சியில் இந்த வாகனத்தை ஹோண்டா நிறுவனம் பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2023ஆம் ஆண்டிற்கான மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது எதிர்கால அறிமுகங்களையும், கண்டுப்பிடிப்புகளையும் காட்சிப்படுத்தி வருகின்றன. அப்படியிருக்கையில், உள்நாட்டு ஜப்பான் நிறுவனம் மட்டும் என்ன சும்மாவா இருக்கும்.

honda uni-one hands-free personal mobility

தான் கண்டுப்பிடித்து வைத்துள்ள தயாரிப்புகளை கண்காட்சியில் வரிசைக் கட்டி நிற்க வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று தான் ஹோண்டாவின் யுனி-ஒன் (UNI-ONE) ஆகும். இது ஓர் தனி நபர் போக்குவரத்து வாகனம் ஆகும். அதாவது எவரது உதவியுமின்றி தானாக இயங்குவதற்கு இந்த வாகனத்தை பயன்படுத்தலாம். இதனாலேயே, இந்த வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்றதாக பார்க்கப்படுகிறது.

ஹோண்டா உருவாக்கியுள்ள இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சமே இதில் ஹேண்டில்பார் அல்லது ஸ்டேரிங் சக்கரம் என எதுவும் இல்லாதது ஆகும். இதனால் தான் இந்த வாகனத்தை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாகனம் என அழைக்கின்றனர். ஸ்டேரிங் இல்லாவிடினும், வாகனத்தில் அமர்ந்திருப்பவர் தனது உடல் எடையை அசைத்தாலே போதும், வாகனம் அதற்கேற்ப திரும்பும் என தெரிவிக்கிறது ஹோண்டா.

honda uni-one hands-free personal mobility

இந்த வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதே பயணியால் சில வேலைகளை செய்ய முடியும். யுனி-ஒன் வாகனத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம், இதன் உயரத்தை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்பதாகும். இதனால், உயரத்தில் ஏறி அமர முடியாதவர்கள் வாகனத்தின் உயரத்தை குறைத்து, அமர்ந்த பின் அதன் உயரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

யுனி-ஒன் வாகனம் இரு சக்கரங்களை கொண்டுள்ளது. பயணி தூக்கெறியப்படுவதை தடுக்க வாகனத்தில் அட்வான்ஸான கண்ட்ரோல் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. உடல் அசைவு மூலமாக தான் இந்த வாகனத்தை இயக்க வேண்டும் என்றில்லை... தாழ்வான பொசிஷனில் இருக்கும்போது ஜாய்ஸ்டிக் மூலமாகவும் கண்ட்ரோல் செய்யலாம். இதன் காரணமாகவே, இது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றது என கூறப்படுகிறது.

honda uni-one hands-free personal mobility

பயணியின் நகர்வுகளை புரிந்துக் கொள்வதற்காக வாகனத்தை சுற்றிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணியின் உடல் அசையும் திசை மற்றும் கோணம் உள்ளிட்டவற்றை கொண்டு, எந்த திசையில் இயங்க வேண்டும், எவ்வளவு வேகத்தில் இயங்க வேண்டும் என்பதை வாகனம் தீர்மானித்துக் கொள்ளும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

வாகனம் தன்னிச்சையாக எடுக்கும் இந்த முடிவுகள் எவ்வாறானதாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள இந்த வாகனத்தில் ஃபீட்பேக் கண்ட்ரோலும் உள்ளது. ஹோண்டாவின் ஒரிஜினல் வீல் மெக்கானிசம் இந்த வாகனத்தை அனைத்து திசைகளிலும் எளிதாக இயங்க அனுமதிக்கிறது. நீங்கள் இந்த வாகனத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

honda uni-one hands-free personal mobility

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா யுனி-ஒன், ஓர் எதிர்கால தனி நபர் போக்குவரத்து வாகனமாக இருப்பதற்கு அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளது. எப்படியிருந்தாலும், எதிர்காலத்தில் தனித்தனியாக இயங்கவே பலர் விரும்புபவர். ஆதலால், இவ்வாறான வாகனங்களுக்கு அந்த சமயத்தில் மிகுந்த தேவை ஏற்படும். அதற்கேற்ப இப்போதே இப்படியொரு வாகனத்தை உருவாக்கி இருப்பது ஹோண்டாவின் எதிர்கால சிந்தனையை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 12:30 [IST]
English summary
Honda uni one hands free personal mobility concept unveiled all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X