எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் டூ-வீலர் வெளியீடு.. இதோட பேருக்காகவே எல்லா பேரண்ட்ஸும் இத வாங்கி குவிக்க போறாங்க!
புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னி நிறுவனம் (Walt Disney Company), அதன் நூற்றாண்டை இந்த ஆண்டுடன் பூர்த்தி செய்திருக்கின்றது. இந்த நிகழ்வை பெரும் கொண்டாட்டமாக அது கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, அதாவது, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடும் விதமாக நிறுவனம் ஹோண்டா மற்றும் கப் ஹவுஸ் தாய்லாந்து உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
இந்த கூட்டணியானது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக ஓர் ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. சூப்பர் கப் 125 (Super Cub 125) மாடலிலேயே பிரத்யேக டிஸ்னி 100 எடிசன் சிறப்பு பதிப்பு (Disney Edition) உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த எடிசனை நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்க இருக்கின்றது. ஆமாங்க மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இந்த லிமிடெட் எடிசன் சூப்பர் கப் 125 பைக்கையே ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. 2023 பாங்காக் மோட்டார் ஷோ வாயிலாகவே அது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது 44 வது பாங்காக் வாகன கண்காட்சி (Bangkok Motor Show) ஆகும். இந்த சர்வதேச நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றனர். தங்களின் பங்களிப்பின் ஓர் பகுதியாக நிறுவனங்கள் புதுமுக தயாரிப்புகளை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே ஹோண்டா அதன் சிறப்பு பதிப்பு சூப்பர் கப் 125 மொபட்டை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் டிஸ்னியின் புகழ்பெற்ற கார்டூன் ஷோக்களில் ஒன்றான மிக்கி மவுஸ் (Mickey Mouse) கிராஃபிக்குகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர டிஸ்னி 100 எனும் பேட்ஜும் அதில் இடம் பெற்றிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாகவே 100 யூனிட்டுகளை மட்டுமே இந்த சிறப்பு வசதியுடன் ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. அனைத்திலும் ஸ்போர்ட் சீரியல் நம்பர்களும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிறப்பு பதிப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக ஆங்காங்கே குரோம் பூச்சுக் கொண்ட அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், சேடின் பிளாக் நிறம் இருசக்கர வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது இருசக்கர வாகனத்தின் பக்கம் பார்வையாளர்களைக் கண்டிப்பாக சுண்டி இழுக்கும். இத்துடன், சிவப்பு நிறமும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இது டூ-வீலருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல மேலும் மேலும் அழகு சேர்க்கக் கூடிய அம்சங்களை இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது. கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் இதன் விலையும் சற்று கூடுதலாகக் காட்சியளிக்கின்றது. வழக்கமான ஹோண்டா கப் 125 89,600 தாய்லாந்து பாத்திற்கே (தாய்லாந்து கரன்சி பெயர்) விற்கப்படுகின்றது.

ஆனால், இந்த டிஸ்னி 100 சிறப்பு எடிசன் சூப்பர் கப் 125க்கு 116,400 பாத் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 2.81 லட்சம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலையிலேயே அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. ஆனால், மிக மிக குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
டிஸ்னி ரசிகர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும் என்பதால், வாங்குபவர்கள் மத்தியில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









