பல்சரை தூக்க நாள் குறித்த ஹோண்டா! யூனிகார்ன் பைக்கை இப்படி மாத்தி இவ்வளவு கம்மி ரேட்ல ரிலீஸ் பண்ண போறாங்களா?
ஹோண்டா நிறுவனம் எஸ்பி 160 என்ற புதிய பைக்கை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக்கை தனது சிறந்த பைக்கான யூனிகான் பைக்கிற்கு மாற்றாக களம் இறக்குகிறது. இந்த பைக்கின் டிசைன், இன்ஜின், விலை உள்ளிட்ட விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஷைன் 100 மற்றும் டியோ 125 ஆகிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த சூட்டோட சூட்டாக 160 சிசி செக்மெண்டில் புதிதாக ஒரு பைக்கை அறிமுகப்படுத்த ஹேண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பைக் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய பைக் யூனிகானை அடிப்படையாகக் கொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்பி 125 பைக்கை விட கொஞ்சம் உயர் ரகத்தில் இருக்கும் பைக்காக வடிவமைக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஹோண்டா நிறுவனம் எஸ் பி 160 என்ற பெயரில் இந்த பைக்கை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன் அடிப்படையில் ஹோண்டா எஸ்பி 125 பைக்கை ஒத்த டிசைனாகவும் ஆனால் தொழிற்நுட்ப அடிப்படையில் ஹோண்டா யூனிகான் பைக் போன்ற ஒரு அம்சங்களை கொண்டதாக இந்த பைக் உருவாக்கப்படும் என தெரிகிறது. யூனிகான் பைக் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த பைக்கும் தயாரிக்கப்படுகிறது.

தற்போது ஹோண்டா எஸ்பி 125 பைக் டிவிஎஸ் ரைடர் பைக்குக்கு நேரடி போட்டியாக களத்தில் விற்பனையாகி. எஸ்பி 160 பைக் மார்க்கெட் வரும்போது இது நேரடியாக யமஹா எஃப் ஸி வ 4.0 மற்றும் சுஸூகி ஜிக்சர் 155 மற்றும் என்ட்ரி லெவல் பஜாஜ் பல்சர் 150 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூனிகான் 160 பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் இதில் பொருத்தப்பட உள்ளது.இந்த இன்ஜினை பொருத்தவரை 162.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் ஆகும். இது 7500 ஆர்பிஎம்-ல் 12.9 பிஎச்பி பவரையும் 5500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. யூனிகான் பைக் 18 இன்ச் வீல் இருக்கும். இந்த பைக் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் என இரண்டு வேரியண்டுகளாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் சொகுசு வசதிகளும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதன் விலையை பொருத்தவரை ரூ1.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது ஹோண்டாவின் யூனிகார்ன் பைக் ரூ1.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. எஸ்பி 160 பைக் அதை விட சற்று கூடுதல் அம்சங்கள் கொண்ட பைக்காக இருக்கும் என்பதால் சற்று விலை அதிகமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூனிகான் பைக் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த பைக்கும் தயாராகும் என்பதால் யூனிகான் பைக் போல இதிலும் அதிகமான வீல் பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதிகமான வீல் பேஸால் ரைடர் மற்றும் பில்லியன் ரைடர் ஆகியோருக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். இதனால் நீண்ட தூர பயணத்திற்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கும். இந்த பைக் அடுத்த மாதம் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹோண்டாவின் யூனிகான் பைக் மார்க்கெட்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த பைக்கை ஏராளமான மக்கள் விரும்பி வாங்கினார்கள். இன்றும் இந்த பைக்குக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவு மவுசு இருக்கிறது. இந்நிலையில் அதற்கு மாற்றாக எஸ்பி 160 என்ற பைக்கை ஹோண்டா களம் இறக்குவது ஹோண்டா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா யூனிகான் பைக்கின் விற்பனைக்கு முக்கியமான காரணம் அதன் டிசைன் அம்சம் தான் யூனிகான் பைக்கின் டிசைன் மக்களுக்கு பிடித்ததால் அதிகமாக வாங்கினார்கள். எஸ்பி 160 டிசைனையும் தொடர்ந்து மேம்படுத்தி அறிமுகப்படுத்தினால் நிச்சயம் அந்த பைக்கின் விற்பனையும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









