ஹோண்டா எக்ஸ்எல்750 பைக் ரூ10.99 லட்சம் என்ற விலையில் அறிமுகம்! ஏன் இவ்வளவு விலை?

ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் என்ற ஆப் ரோடு பைக்கை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் என்ற ஆப் ரோடு பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கை முழுமையாக கட்டமைக்கப்பட்ட பைக்காக இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 10.99 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது.

honda xl750 transalp

ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் பைக்கை முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஹோண்டா பிக்விங் டீலர் ஷிப்கள் மூலம் புக்கிங்களை பெற்று வருகிறது. இப்படியாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளருக்கு அடுத்த மாதம் இந்த பைக் டெலிவரி செய்யப்படும் என ஹோண்டா நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சுட்முசுமு ஓட்டானி கூறும்போது: " நாங்கள் புதிய எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இது அட்வென்ஞ்சர் ரக பைக் ஆகும். தொடர்ந்து அட்வென்ஞ்சர் ரக பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களும் இந்த பைக்குகள் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

honda xl750 transalp

இந்த பைக்கை ஓட்டி பார்க்க அவர்கள் பெரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அட்வென்ஞ்சர் பைக் ரைடிங்கை விரும்பும் மக்கள் மத்தியில் இந்த ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் பைக் பிரபலமாக இருக்கிறது. நிச்சயம் இந்தியாவில் உள்ள அட்வென்ஞ்சர் விரும்பிகளுக்கு இந்த பைக் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்" என கூறினார்.

ஹோண்டா நிறுவனம் இந்த எக்ஸ்எல் 750 டிரான்சல்ப் பைக்கில் 80களில் அந்நிறுவனம் விற்பனை செய்த டிரான்சல்ப் பைக்கில் உள்ள டிசைனை இன்ஸ்பயர் செய்து வடிவமைத்துள்ளது. இதில் காம்பேக்ட்டான எல்இடி ஹெட்லைட், விண்ட் ஸ்கிரீன், பெரிய டேங்க், ஸ்பிரோட்ஸ் பின்பக்கத்தில் அலுமினியம் கேரியர், அட்வென்ஞ்சர் அம்சங்களை தாங்க கூடியதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலில் ஸ்பீடாமீட்டர், டேகோமீட்டர் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், இன்ஜின் பெரிமீட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் டிஸ்ப்ளே செய்யப்படுகிறது. இந்த டிஸ்ப்ளேவை நாம் கஸ்டமைஸ்டு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் கியரை இடது பக்க ஹேண்டில் பாரில் மாற்றிக் கொள்ளும் வகையில் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கில் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தில் செயல்படும் சில அம்சங்களும் உள்ளன. ரைடர் தனது ஸ்மார்ட் ஃபோனை கனெக்ட் செய்து அதன் மூலம் கால்கள், மெசேஜ்கள், மியூசிக், நேவிகேஷன், உள்ளிட்ட அம்சங்களை பெற முடியும். இதன் மூலம ்பைக் ரைடு சுலபமாக இருக்கும்.

மேலும் இந்த ஹோண்டா எக்ஸ்எல்750 டிரான்சல்ப் பைக்கில் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் அம்சம் இருக்கிறது. பைக்கில் உள்ள ரைடர் சடன் பிரேக் பிடித்தால் பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்க தானாக பிளாஷிங் ஹாஸர்டுலைட் ஆன் ஆகும். அதேபோல டர்ன் சிக்னலை தானியங்கியாக கேன்சல் செய்யும் அம்சமும் இருக்கிறது. இந்த பைக் இஞ்சினை பொருத்தவரை 755சிசி லிக்யூட் கூல்டு இன்லைன் 2 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 270டிகிரி கிராங்க் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஆப்ரோடு அம்சங்கள் நிறைந்து இருப்பதால் மலைப்பகுதிகள் உள்ளிட்ட கரடு முரடான பகுதிகளில் சுலபமாக பயணிக்க முடியும். குறைவான மற்றும் மிட்ரேஞ்ச் நிலையில் நல்ல டார்க் வழங்கும் வகையில் இதன் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 75என்எம் டார்க்கை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த இன்ஜின் 6ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிலிண்டர் வோர்டெக்ஸ் மற்றும் நீசிக் கோட்டிங் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக் ஒரு டூ வீலர் பைக்காக இருக்கிறது. இதில் திராட்டல் பை வயர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து விதமான ரைடு மோடுகள் உள்ளன. ஸ்போர்ட்ஸ், ஸ்டாண்டர்ட், ரெயின், கிரைவல் மற்றும் யூசர் ஆகிய ரைடு மோடுகள் இருக்கிறது. மேலும் இந்த பைக்கில் டூயட் சேனல் ஏபிஎஸ் மற்றும் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை 43 ஷோவா எஸ். எஃப்எஃப்சிஏ தலைகீழாக பொருத்தப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ப்ரோ லிங்க் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வீலை பொருத்தவரை முன்பக்கம் 21 இன்ச் வீலும் பின்பக்கம் 18 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கை பொறுத்தவரை இரண்டு 310 மிமீ வேவ் டிஸ்க், 2 ஹைட்ராலிக் பிஸ்டன் கேலிபருடன் முன்பக்கத்திலும், பின்பக்கம் 256 மீமி சிங்கிள் பெஸ்ட் ஒரு பாட் கேலபருடன் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் ரோஸ் ஒயிட் மற்றும் மேட் பாலிடிக் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பைக்காக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வருவதால் இந்த பைக்கின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகவும் ஒரு நல்ல எஸ்யூவி காரை விட இந்த பைக்கின் விலை அதிகமாக இருப்பதால் இந்த பைக்கை வெகு சிலர் வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2023, 18:12 [IST]
English summary
Honda xl750 transalp makes its debut in india at inr 10 99 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+