ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹை ஸ்பீடு வேரியண்ட் அறிமுகம்! ஆக்டிவாவே தோத்திடும் போல!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரையே தூக்கி சாப்பிடும் ஸ்டைலில் இந்திய நிறுவனமான ஹாப், அதன் ஹை ஸ்பீடு லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஹாப். இந்த நிறுவனமே புதிய ஹை ஸ்பீடு வேரியண்டை லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதிய வேரியண்ட் நிறுவனத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ விற்பனையகம் மற்றும் ஆன்லைன் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 97 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்கூட்டர்

120 கிமீ தூரம் பயணிக்கலாம்

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹை ஸ்பீடு வேரியண்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 2.1 kWh திறன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓர் லித்தியம் அயன் ரக பேட்டரி பேக் ஆகும்.

மோட்டாரின் திறன் வெளிப்பாடு

இதேபோல் இதன் ஹை ஸ்பீடு திறனுக்காக 72 வோல்ட், 2.2 கிலோவாட் பவர் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.9 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க 90 என்எம் டார்க் வரை வெளியேற்றும். கூடுதல் சிறப்பு வசதியாக ஹை ஸ்பீடு வேரியண்ட் ஹாப் லியோவின் மோட்டாரில் சினுசோடியல் எஃப்ஓசி வெக்டர் கன்ட்ரோல்லர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் மிக ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

2.5 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம்

மேலும், ஈசி ஹேண்ட்லிங் வசதியையும் இது வழங்கும். ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் 2.1 kWh பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும். அதவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 2.5 மணி நேரங்களே போதும். இதற்காக 850 வாட் திறன் கொண்ட ஸ்மார்ட் சார்ஜரை நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஐந்து விதமான ரைடிங் மோட்களை கொடுத்திருக்காங்க

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. ஈகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மோட்களே அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரைடிங் வேகத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 12 டிகிரி ஏற்றமான பாதையில்கூட அதிக திறனுடன் செயல்பட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பலகட்ட ஆய்விற்கு பின்னரே இதனை நிறுவனம் உறுதியாக தெரிவித்திருக்கின்றது.

ஷார்ப்பான பிரேக்கிங் சிஸ்டம்

லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக 90/90/ஆர்10 ரக டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இது இழந்த மின்சாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைக்கு உகந்த தயாரிப்பாகும்.

இந்தியாவிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுத்திருப்பதே இதற்கான சான்றாக இருக்கின்றது. இதுதவிர, அதிக லோடிங் திறன் கொண்டதாகவும் இந்த வாகனத்தை ஹாப் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. 160 கிலோ வரையில் தாங்கிச் செல்லக் கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல பொருட்கள் ஐபி 67/ 65 தர சான்று பெற்றதாக இருக்கின்றது. இதற்கு, தண்ணீர் மற்றும் தூசியால் வாகனங்கள் பாதிப்பைச் சந்திக்காது என்பதே அர்த்தம் ஆகும்.

நிறைய வண்ண தேர்வில் வாங்கிக்கலாம்

இதுதவிர தொழில்நுட்ப வசதிகளாலும் இந்த வாகனம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் ஹாப் லியோ ஹை ஸ்பீடு வேரியண்டில் எல்சிடி டிஜிட்டல் கன்சோல், ஜிபிஎஸ் டிராக்கர் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஐந்து விதமான நிற தேர்வுகளில் இந்த வாகனத்தை விற்பனைக்கு வழங்கவும் நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. கருப்பு, வெள்ளை, கிரை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் வருகை பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம்.

Most Read Articles
English summary
Hop electric launches leo high speed variant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X