ரொம்ப குண்டா இருக்கவங்களாலும் இந்த எலெக்ட்ரிக் பைக்குல பயணிக்க முடியும்!.. ஸ்பிளெண்டருக்கு ஆப்பு ரெடி!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி ஸ்டார்ட் அப் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹாப் எலெக்ட்ரிக் (Hop Electric)-ம் ஒன்று. இந்த நிறுவனமே அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்கை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இ மோட்டார் ஷோ (Hyderabad e-Motor Show) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி வாயிலாகவே ஹாப் எலெக்ட்ரிக் அதன் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஹாப் ஆக்ஸோ (Hop Oxo) எலெக்ட்ரிக் பைக்கையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமாக இதற்கு ரூ. 1.56 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும்.

அதிகபட்ச விலையே இவ்ளோதானா!
உயர்நிலை தேர்விற்கு ரூ. 1.80 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விற்பனைக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு புக்கிங் பணிகளும் தொடங்கி உள்ளன. நிறுவனத்தின் விற்பனையகம் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் வாயிலாக ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது நிறுவனத்தின் விற்பனையகங்கள் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன.
எத்தனை நிற தேர்வுகளில் கிடைக்கும்?
ஆகையால், புதிய ஷோரூம்கள் மற்றும் விற்பனையகங்களை ஏற்படுத்தும் பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது. ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். ட்வைலைட் கிரே (Twilight Grey), கேன்டி ரெட் (Candy Red), மேக்னடிக் ப்ளூ (Magnetic Blue), எலெக்ட்ரிக் யெல்லோ (Electric Yellow) மற்றும் ட்ரூ பிளாக் (True Black) ஆகியவையே அவை ஆகும்.

எவ்வளவு ரேஞ்ஜ் தரும்?
ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஓர் முழு சார்ஜில் 135 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக 3.75 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுவே இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனை வழங்கும். பெரிய அளவில் விரட்டி ஓட்டாமல், அதாவது ரேஷ் டிரைவ் செய்யாமல் ஹாப் ஆக்ஸோவை இயக்கினால் 150 கிமீ வரையில் பயணிக்க முடியும்.
ஆஹா இவ்ளோ வேகத்துல போகுமா?
இதைத்தொடர்ந்து, பிஎல்டிசி ஹப் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 5.2 kW - 6.2 kW திறன் வரை வெளியேற்றும். இதுமட்டுமில்லைங்க 185 என்எம் முதல் 200 என்எம் டார்க் வரையில் வெளியேற்றும். ஹாப் ஆக்ஸோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ முதல் 95 கிமீ வரையில் ஆகும். எலெக்ட்ரிக் பைக்கை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ரைடிங் மோட்கள் விபரம்
இதற்கான வசதியை இந்த பைக்கில் ஹாப் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. அதேவேளையில், இதை வீட்டு சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். அதிக நிற தேர்வைப் போலவே அதிக ரைடிங் மோட்கள் இ-பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. ஈகோ (Eco), பவர் (Power), ஸ்போர்ட் (Sport) மற்றும் ரிவர்ஸ் (Reverse) ஆகிய மோட்களே இதில் வழங்கப்பட்டு உள்ளன.
செல்போன் இணைப்பு வசதி கொடுத்திருக்காங்க
இவற்றுடன் சேர்த்து சினோசோடியல் எஃப்ஓசி வெக்டர் கன்ட்ரோல் எனும் சிறப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக 5 அங்குல ஸ்மார்ட் எல்சிடி திரை இருக்கின்றது. இது ஓர் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஆகும். 4ஜி எல்டிஇ கேட்4 இணைப்பு வசதியே இதில் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக எடைக் கொண்டவர்களாலும் பயணிக்க முடியும்
இத்துடன் ஜிஎன்எஸ்எஸ், ஏஜிபிஎஸ் வசதியுடனும், பிஎல்இ 5.0 செல்போன் செயலி வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் எட்ஜ் டூ கிளவுட் செக்யூரிட்டி வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், பாதுகாப்பு பிரச்னை இருக்காது. இருசக்கர வாகனத்தில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் 250 கிலோ வரையில் தாங்கும் திறன் கொண்டது.
இவ்ளோ சூப்பரான பிரேக்கிங் சிஸ்டம் கொடுத்திருக்காங்களா?
இதை வைத்து பார்க்கையில் அதிக எடைக் கொண்ட நபர்களாலும் ஆக்ஸோவில் மிக தாராளமாக பயணிக்க முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இழந்த மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான மின்சார பைக்காகவே ஹாப் ஆக்ஸோ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வழக்கமான மின்சார பைக்கைக் காட்டிலும் அதிக பலனை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக தினசரி பயன்பாட்டிற்கு உகந்ததாக இவ்வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பிளாட்டினா பைக்குகளுக்கு உகந்ததாக ஆக்ஸோ இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








