இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்க கூட்டம் அலை கடலென குவிய போகுது!! ஓ இதுதான் விஷயமா... ஒன்றை வாங்கி போட வேண்டியதுதா

மத்திய அரசின் மானியம் குறைப்பால், எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெய்ப்பூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று தனது எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலையை கணிசமாக குறைத்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த எந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அது? என்பது உள்பட, இதுகுறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு சில வருடங்களுக்கு முன் ஃபேம்-2 திட்டத்தின்படி எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் அதில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு குறைத்து கொண்டது.

hop oxo electric bike price reduced

இதன் காரணமாகவே ஓலா, ஏத்தர், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட தங்களது எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை வரும் மாதங்களில் குறைய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஹோப் எலக்ட்ரிக் நிறுவனம் ஆச்சிரியமளிக்கும் விதமாக அதன் ஆக்ஸோ எலக்ட்ரிக் பைக்கின் விலையை குறைத்து கொண்டுள்ளது.

ஹோப் எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 3 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. லைஃப், லியோ மற்றும் ஆக்ஸோ என்பவை அந்த 3 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாகும். இதில் லைஃப் மற்றும் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகும். ஆக்ஸோ ஆனது ஹோப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகும்.

hop oxo electric bike price reduced

இந்த ஹோப் ஆக்ஸோ எலக்ட்ரிக் பைக்கின் விலையே ரூ.17,000 குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ஆக்ஸோ எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.65 லட்சம் ஆகும். ஆனால் இனி ரூ.1.48 லட்சம். கருப்பு, நீலம் கிரே, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். ஹோப் ஆக்ஸோவில் 3.75kWh பேட்டரி பேக் மற்றும் 5.2 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.

ஆக்ஸோ எலக்ட்ரிக் பைக்கின் விலையை குறைத்துள்ள அதேவேளையில், லியோ & லைஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ஹோப் எலக்ட்ரிக் நிறுவனம் உயர்த்திக் கொண்டுள்ளது. லைஃப் மற்றும் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆரம்பத்தில் குறைந்த வேகத்தில் இயங்கக் கூடியவைகளாக மட்டுமே ஹோப் எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துவந்தது. இந்த நிலையில் நடப்பு 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஹோப் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பீடு வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது.

hop oxo electric bike price reduced

விலை உயர்வுக்கு பிறகு ஹோப் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் குறைந்த-வேக வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84 ஆயிரமாகவும், ஹை-ஸ்பீடு வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.97,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம், ஹோப் லைஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67,500 ஆக அதிகரித்துள்ளது. லைஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹை-ஸ்பீடு வெர்சனில் பெற முடியாது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மானியம் குறைப்பால் பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் விலைகளை அதிகரித்துவரும் சூழலில் ஓர் நிறுவனம் விலையை குறைத்திருப்பது உண்மையில் கவனிக்கத்தக்கக்கூடிய விஷயமாகும். அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் பைக் ஒன்றின் விலை குறைக்கப்பட்டு இருப்பது உண்மையில் நல்ல விஷயமாகும். ஏனெனில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையாகுவதில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 21:30 [IST]
English summary
Hop oxo electric bike price reduced now at rs 1 48 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X