மோட்டோ ஜிபி ரசிகர்களே உங்களை தேடி வருகிறது சிட்டி டூர்! இந்தியா முழுவதும் பயணிக்கும் பிரம்மாண்ட முன்னெடுப்பு

மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்கான சிட்டி டூர் பேரணி ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இந்தப் பேரணியில் சுமார் 400 பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர். மோட்டோ ஜிபி பாரத் போட்டி நடக்கவிருப்பதை முன்னிட்டு இது குறித்த விழிப்புணர்வையும், விளம்பரத்தையும் ஏற்படுத்த இந்த சிட்டி டுர் பைக் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக மோட்டோ ஜிபி பாரத் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது வரும் செப்டம்பர் மாதம் 22 முதல் 24 ஆம் தேதி வரை நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பகுதியில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டி குறித்து இந்தியா முழுவதும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த சிட்டி டுர் திட்டமிடப்பட்டுள்ளது.

MotoGP Bharat city tour

இந்தப் போட்டியை நடத்தும் ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் சிட்டி டூர் பைக் பேரணி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. துருவா காலேஜ் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி பகுதியில் துவங்கிய இந்த பேரணி ஹைடெக் சிட்டி வரை நடந்தது. இதில் உற்சாகமான 400 பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

இந்த பைக் பேரணியில் மோட்டோ ஜிபி அட்மாஸ்பியர் கொண்ட மிகப்பெரிய டிஜே ஷோ, பைக் ஸ்டண்ட், உணவு ஸ்டால், செல்ஃபி பூத், 360 விஆர், மற்றும் கேமிங் பூத் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. இதில் கலந்துகொண்ட பைக் ரைடர்கள் இந்த நிகழ்வுகளில் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த மோட்டோ ஜிபி யின் கொள்கையான "சாலைகள் ரைடு செய்வதற்கும், டிராக்குகள் ரேஸ் ஓட்டுவதற்கும்" என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

MotoGP Bharat city tour

இதுகுறித்து பிளாஸ்டிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சிட்டி டூர் பிரிவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான சுஷாந்த் ஸ்ரீ வத்சவா கூறும் போது: "மோட்டோ ஜிபி பாரத்தின் சிட்டி டூர் முன்னெடுப்பிற்கு ஹைதராபாத் நிகழ்வு மிகப்பெரிய நம்பிக்கையையும் சிறகையும் கொடுத்துள்ளது. இந்த சிட்டி டூர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பிக்கை பிறந்துள்ளது.

இதில் பங்கேற்றவர்கள் சிட்டி தெருக்களில் திரில்லான ரைடிங் அனுபவத்தை பெறுகின்றனர். தொடர்ந்து இதே போல மற்ற நகரங்களிலும் சிட்டி டூர் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் இந்த சிட்டி டுர் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

MotoGP Bharat city tour

இந்த சிட்டி டூர் முன்னெடுப்பு அடுத்த கட்டமாக வரும் 23ஆம் தேதி ஆமதாபாத்தில் வைத்து நடைபெற உள்ளது. அங்கும் ஏராளமான ரைடர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இங்கு வைத்து வரும் செப்டம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை நடக்க உள்ள மோட்டோ ஜிபி ரேசை பார்க்க பார்வையாளர்களை அழைக்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன.

மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்கான டிக்கெட் புக் மை ஷோ தளத்தில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும் தற்போது இந்த டிக்கெட்டுகளின் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது. பலர் இந்த டிக்கெட்களை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர் இந்த போட்டி துவங்கும் முன்பே டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மோட்டோ ஜிபி போட்டிகளைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன இதுவரை இந்த போட்டிகளை காண வெளிநாடு தான் செல்ல வேண்டும் என்பது இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே இந்த போட்டியை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. இது பைக் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோ ஜிபி மாதிரியான மிகப்பெரிய போட்டிகள் இந்தியாவில் நடப்பது இந்தியர்களுக்கு பெருமை தான். இந்தப் போட்டி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த சிட்டி டூர் முன்னெடுப்புகளை செய்துள்ளது நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சியாகும். இதனால் பைக் ரைடர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் ஏற்படும்

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 18:36 [IST]
English summary
Hyderabad chapter of motogp bharat city tour kicks off with 400 bikers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X