கோவா இந்தியா பைக் வீக் நீகழ்ச்சியில் பைக் ஓட்டிய அனுபவம் எப்படி இருந்தது? இந்த வீடியோவ மிஸ் பண்ணீடாதீங்க!
சமீபத்தில் கோவாவில் இந்தியா பைக் வீக் 2023 என்ற நிகழ்ச்சி நடந்தது இங்கு ஏராளமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வந்து தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். மேலும் வாகன ரசிகர்கள் இந்த இடத்தில் கூடி அவர்களுக்கு பிடித்த பைக்குகள் குறித்து தெரிந்து கொண்டும் புதிய பைக்குகளை பார்த்தும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் இந்தியா பைக் நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியின் போது அங்கு வரும் பைக் விரும்பிகளுக்கு ரைடிங் அனுபவத்தை வழங்க சியட் நிறுவனம் நான்கு விதமான டிராகுகளை அமைத்துக் கொடுத்திருந்தது. அந்த டிராக்குகளில் பைக் ஓட்ட பல்வேறு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. பிளாட் டிராக், எண்டியூரோ டிராக், மட்டு டிராக் என விதவிதமான டிராகுகள் இருந்தன. இந்த டிராக்குகளில் பைக் ஓட்டி பார்த்த எங்கள் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளோம். அதை நீங்கள் கீழே காணலாம்.
இந்த டிராக்குகளில் எங்கள் குழு ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கை ஓட்டி பார்த்தது பிளாட் டிராக், எண்டியூரோ டிராக், என பல்வேறு விதமான டிராக்குகள் இருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த யார் வேண்டுமானாலும் இந்த டிராக்குகளில் பைக்குகளை ஓட்டி பார்த்து அனுபவத்தை பெற முடியும். இது மக்களுக்குள் இருக்கும் ரேசிங் மனநிலையை உற்சாகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இப்படியான டிராகுகளை அமைத்து அங்கு பைக் ரைடிங் அனுபவத்தை வழங்குவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. இதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சிக்காக கோவாவிற்கு வந்தனர். சுமார் 20,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியை மிகப்பெரிய நிகழ்ச்சியாக மாற்றி காட்டினர்.


Click it and Unblock the Notifications








