அடேங்கப்பா இந்த நிகழ்ச்சியை பார்க்க இவ்வளவு கூட்டமா? கோவாவில் மக்கள் இதை பார்க்க தான் கூட்டமா போறாங்க!

கோவாவில் நடக்கும் இந்தியா பைக் வீக் 2023 நிகழ்வின் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய நிகழ்வாக இது மாறி உள்ளது. பைக் ரைடர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோவாவில் தற்போது இந்தியா பைக் வீக் 2023 என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று 8ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்று 9ஆம் தேதியும் இரண்டாவது நாளாக நடக்கிறது மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டதை விட வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகி வந்த நிலையில் ஏவப்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி இருந்தார்கள்.

india bike week 2023

நேற்று முதல் நாளாக இந்த நிகழ்ச்சி துவங்கும் போது இந்த நிகழ்ச்சியை காண சுமார் 20,000 பேர் வந்திருந்தார்கள். யாரும் எதிர்பாராத அளவுக்கு இவ்வளவு பெரிய வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியும் காட்சிப்படுத்தியும் வருகின்றன. இதன்படி மக்கள் எதிர்பார்த்த பல வாகனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று டிரையம்ப் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் வைத்து தனது ஸ்டெலத் ரக பைக்குகள் 8 பைக்குகளை அறிமுகப்படுத்தியது இதுபோக டைகர் 900 என்ற இரண்டு பைக்குகளை காட்சிப்படுத்தியது. இதெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்க்கப்பட்ட பைக்காக இருக்கிறது. இது போக அப்ரில்லா நிறுவனம் தனது வாகனத்தை அறிமுகப்படுத்தியது.

india bike week 2023

கவாஸகி நிறுவனம் கூட சிறிய ரக பைக் மற்றும் பெரிய ரக பைக் என தனது வாகனங்களை எல்லாம் இங்கு அறிமுகப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பைக்குகளாக உள்ளன. போக கேடிஎம், ஹீரோ, சுஸூகி உள்ளிட்ட பல நிறுவனங்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றன. மேலும் ஹார்லி டேவிட்சனின் கஸ்டமைஸ்டு பைக்குகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வெறும் பைக் அறிமுகம் மட்டுமல்லாமல் டிஜே, மியூசிக் திருவிழா உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அதை கொண்டாடி வருகின்றனர். இது போக இந்த நிகழ்ச்சியில் உணவு திருவிழா வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு விதவிதமான உணவுகள் எல்லாம் தயார் செய்யப்பட்டு அங்கு வந்தவர்கள் வாங்கி ருசி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

india bike week 2023

இதுபோக இங்கு பழைய கிளாசிக் வாகன கலெக்ஷன்களை எல்லாம் காட்சிப்படுத்தும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வாகன கலெக்டர்களான அணில் பிங்க்கிரேட் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தங்கள் வாகனங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதுபோக பல ஒர்க் ஷாப்புகள் மற்றும் கஸ்டம் மோட்டார் சைக்கிள் செய்யும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தன.

சுற்றுலாத்தலமான கோவாவில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பைக் ரைடருக்கு பெரும் பாக்கியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் பலர் கோவாவை சுற்றி பார்க்க வசதியாகவும் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த நிகழ்ச்சி ஈர்க்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்ததால் இங்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய மக்கள் மத்தியில் பைக் மற்றும் கார் மீதான விருப்பம் அதிகமாகியுள்ளதால் அவர்கள் இது போன்று நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்று இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் கார் பைக் குறித்த விழிப்புணர்வு அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இது போன்ற மக்கள் கூடும் இடங்களில் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்துவது மூலமும் அறிமுகப்படுத்துவது மூலமும் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறது. தற்போது டிரையம்ப், ஆப்ரில்லா, கேடிஎம் போன்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 12:26 [IST]
English summary
India bike week 2023 goa 20k attendees
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X