பைக் ரைடர்கள் எல்லாம் ரெடியா இருங்க! இன்று துவங்குகிறது இந்தியா பைக் வீக்!

மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இந்தியா பைக் வீக் கோவாவில் இன்று துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பைக் ரேஸ் போட்டிகள் மற்றும் பைக் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள பைக் ரசிகர்கள் மத்தியில் இந்தியா பைக் வீக் குறித்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் கோவாவில் உள்ள வாகேட்டர் என்ற பகுதியில் "இந்தியா பைக் வீக்" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபடி இன்று துவங்குகிறது. இன்றும் நாளையும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

india bike week 2023

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பல கலந்து கொள்ள உள்ளனர். முக்கியமாக ஹார்லி டேவிட்சன், ஹீரோ, டிரையம், சுசுகி, அப்ரில்லா கேடிஎம், கவாசகி, ஆர்க்ஸா உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் பைக்குகளை இங்கே காட்சிபடுத்த உள்ளனர். இதன் மூலம் இந்தியாவிற்கு வரும் பல புதிய பைக்குகள் இன்று காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கே பைக் ரேஸ்கள் நடப்பதற்கான ஆறு விதமான ரேஸ் டிராக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூன்று டிராக்குகளை சியட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஃபிளாட் டிராக், என்டியூரோ டிராக் மற்றும் மட் டிராக் ஆகிய மூன்று நாட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் இங்கு வரும் பங்கேற்பாளர்கள் சியட் சூப்பர் கிராஸ் லீக் போட்டியை காண முடியும்.

india bike week 2023

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது கஸ்டம் பில்டு செய்யப்பட்ட எக்ஸ்440 பைக்கை காட்சிப்படுத்துகிறது. இந்த பைக்கை பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ், ராஜ்புட்னா கஸ்டம், ஓல்டு டெல்லி மோட்டார் சைக்கிள் மற்றும் டிஎன்டி மோட்டார் சைக்கிள் ஆகிய நிறுவனங்கள் தனித்தனியாக கஸ்டமைஸ் செய்துள்ளன. அந்த பைக்குகள் எல்லாம் இங்கே காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்ஸா என்ற நிறுவனம் மெண்டிஸ் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்துகிறது. கவாசகி நிறுவனம் இந்திய மார்கெட்டிற்கு வரப்போகும் எலிமினேட்டர் என்ற பைக்கை அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக்குகள் எல்லாம் இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்புகள் களமிறக்க உள்ளது. இதனால் பைக் ரசிகர்கள் பல தற்போது கோவாவிற்கு விரைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இது மட்டுமல்லாமல் மியூசிக் திருவிழா டிஜே நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு செல்லும் பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கொண்டாடலாம். மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் "தி பிக் ஃபோர்க்ஸ் மீட் ஃபெஸ்ட்" என்ற உணவுத் திருவிழாவும் நடக்க உள்ளது. இதில் விதவிதமான அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதையும் பங்கேற்பாளர்கள் என்ஜாய் செய்யலாம்.

இதுபோக வாகன கலெக்ஷனை வைத்திருக்கும் அணில் பின்கிரேட் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தங்கள் பழைய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் ஒர்க் ஷாப்புகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பைக்குகளும் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் தற்போதும் ஆன்லைனில் இருக்கிறது. ஒரு நாளுக்காண டிக்கெட் விலை ரூபாய் 2499 , இரண்டு நாட்களுக்கும் பங்கேற்பதற்கான டிக்கெட் விலை ரூபாய் 2999 என்ற விலைகளில் விற்பனையாகி வருகிறது.

இந்த இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான நபர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதால் இதற்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. மிக நீண்ட எதிர்பார்ப்புக்கிடையில் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளதால் இதில் அறிமுகப்படுத்தப்படும் பைக்குகள் மக்களின் கவனத்தை பெறும் என்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் விரும்பிகள் பலர் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கார்களைவிட பைக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியை குறிவைத்து தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் அவர்களது வாகனங்கள் அதிகம் பேசப்படுகிறது. மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கான இந்த நிகழ்ச்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Friday, December 8, 2023, 8:40 [IST]
English summary
India bike week 2023 location tickets participants unveils details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+