கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக் 2023! வைரலாகும் வீடியோ
இந்தியாவின் பார்ட்டி நகரமான கோவாவில் கடந்த வாரம் இந்தியா பைக் வீக் 2023 என்ற நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல கலந்து கொண்டன. கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகளும் இந்தியாவில் உள்ள பைக் பிரியர்களும் இந்த நிகழ்விற்கு நேரடியாக சென்று கலந்து கொண்டனர். சுமார் 20,000 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மோட்டார் வாகனம் குறித்த நிகழ்ச்சி என்றால் நாம் சும்மா இருப்போமா? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றது எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு. அங்கு சென்று அங்கு நடந்த விஷயங்களை எல்லாம் கேமராவில் படம் பிடித்து வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இப்படியாக இந்தியா பைக் வீக் 2023 நிகழ்வில் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வு குறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல கலந்து கொண்டு தங்கள் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தினர் இதுபோக கஸ்டமைஸ்டு செய்ய்பட்ட பல வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு வரும் பைக் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சியட் நிறுவனம் ரேஸ் டிராக்குகளை தயார் செய்து வைத்திருந்தது. யார் வேண்டுமானாலும் ரேஸ் ஓட்டி பார்க்கலாம் என அனுமதி வழங்கி இருந்தனர்.

இதுபோக அங்கு வந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மியூசிக் திருவிழா, டீஜே திருவிழா எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அங்கு வந்திருந்தவர்கள் மியூசிக் திருவிழாவில் கலந்துகொண்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இது மட்டுமல்லாமல் அங்கிருந்து அவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் பல்வேறு வகையான உணவு ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications








