தமிழகத்தில் நடக்கப்போகும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி! எப்போ எங்க தெரியுமா?

கடந்த வாரம் கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சியை செவென்டி இஎம்ஜி என்ற நிறுவனம் எடுத்து நடத்தியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதிய வாகன அறிமுகங்கள், புதிய தயாரிப்புகள் அங்கு வரும் மக்களுக்கான ரேஸிங் அனுபவம் உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மியூசிக் திருவிழா, டிஜே திருவிழா என விழா களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த செவென்டி இஎம்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மார்ட்டின் டா காஸ்டா, டிரைவ்ஸ்பார்க் நேயர்களுக்காக எங்களுக்கு ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியின் போது இந்தியன் பைக் வீக் நிகழ்ச்சி அடுத்து தமிழ்நாட்டிற்கு வரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் மிகப்பெரிய விருப்பத்தையும் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தமிழகத்தில் சமீப காலமாக காரை கார் பைக் ரேஸ் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த மாதம் ஏற்கனவே சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை சாலைகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இது இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

india bike week in tamilnadu

இதற்கிடையில் இந்தியன் பைக் வீக் போன்ற நிகழ்வுகள் சென்னை அல்லது கோவை ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியன் பைக் வீக் நிகழ்வு தமிழகத்தில் நடக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வு நடந்தால் நீங்கள் இதற்கு செல்வீர்களா உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2023, 19:30 [IST]
English summary
India bike week might happen in tamilnadu soon ceo hints watch video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+